வியாழன், 23 ஆகஸ்ட், 2012

பன்றியும்,பன்றியில் உள்ள எந்த பாகமும் வியாபரத்திற்கு கூடாது


அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு,

நபி(ஸல்) அவர்கள் வியாபரம் தடை செய்த ஒன்றை அதை கூடும் என பத்வா கொடுக்கிறார்கள், ஹதிஸை பற்றி எந்த ஞானமும்  இல்லாமல் எல்லாம் தெரிந்தது போல் மார்க்கத்தில் இல்லாதத்தை புகுத்தியுள்ளார்கள்.இவர்களின் முனாபிக் தனத்தை இன்னும் ததஜ அறியாமல் மூடர்களாக உள்ளார்கள்,


நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள் (இமாம் புஹாரி(ரஹ்)

இதில் தெள்ள தெளிவாக பன்றியை வியாபரம் செய்யக் கூடாது என தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் முனாபிக் பிஜே, பன்றியின் தோல் வியாபரம் செய்யலாம் எனப் பத்வா வழங்கியுள்ளான், அதுவும்  சரி என நம்பும் அவர்களின் கண்மூடித்தனமான கூட்டம்,

பன்றியே வியாபரம் செய்ய தடுக்கப்பட்டிருக்கும் போது பன்றியுள்ள தோல் மட்டும் எவ்வாறு வியாபரம் செய்ய முடியும்.பன்றி உள்ள எதையும் விற்பனை செய்யக் கூடாது எனத் தெளிவாக கூறப்பட்ட பின்னர் ஆனால் முனாபிக் பீஜே அதை வியாபரம் செய்யலாம் என்பது எந்த வகையில் நியாயம்,அறிவுடையோருக்கு விடை கிடைக்கும்

ஆனால் முனாபிக் பீஜே கீழே

அன்று:

பீஜேவே, பன்றியும்,பன்றியில் உள்ள எல்லா பாகமும் ஹராம் எனக் கூறும் வீடியோவை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பார்க்கவும், பார்க்கவும் வீடியோ நேரம் 5:10 வினாடிகளிலிருந்து....


http://www.youtube.com/watch?v=B7pYaA1w5MU

இன்று:


தற்போது அறிவீர்கள் பீஜே ஒரு மாபெரும் பொய்யன் என்று


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மது (1797)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால்
தூய்மை அடைந்துவிடும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (596)

நமது பதில்:

இதறகு முன் உள்ள ஹதிஸை மறுத்து வெளியிட்டுள்ளார்கள்,,நபி(ஸல்) அவர்கள் செத்த ஆடுக்கு விதிவிலக்கு கொடுத்தார்கள், கிழே உள்ள ஹதிஸை தெளிவாக படித்திற்கள் என்றால் உங்களுக்கு நன்றாக புரியும், எப்படி மார்க்கத்தில் விளையாடுகின்றார்கள் என்பதை கண்டறியுங்கள்.

(என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று
(செத்துவிட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து
சென்றார்கள். அப்போது நீங்கள் இதன் தோலால் பயனைடயக் கூடாதா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்,இமாம் புஹாரி(ரஹ்))

 மேல் உள்ள இந்த ஹதிஸை மறைத்து அதற்கு பின் உள்ள  ஹதிஸின் பகுதியை மட்டும் மறைத்து கூறியுள்ளார்கள். இது இவர்களுக்கு புதியதல்ல


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (64) பாடம் (தூய்மை)

நமது பதில்:

இதில் எல்லா என்ற வார்த்தை வந்துள்ளதால் அது பன்றியும் பொருந்தும் எனக் கூறுகின்றார்கள், அதனால் அது வியாபரம் செய்யலாம் எனக் கூறும் சொல், இது இவர்களின் அறியாமை வாதம் ஆகும்.

இதற்கு ஒரு உதாரணம் சொன்ன உங்களுக்கு நன்றாக புரியும்,

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள் என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்)).

இதில் வெளிப்படையாக பார்க்கும் போது நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் திக்ரு செய்வார்கள் எனப் பொருள் கிடைக்கும் ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு அது தூய்மையான நிலையில் தவிர வேறெந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் வெறுக்கிறேன் என மற்றொரு வழியில் நிருபிக்கப்பட்டுள்ளது

சிறு நீர் கழித்து கொண்டு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கு, முஜாஹிர் பின் குன்ஃபுது(ரலி) அவர்கள் ஸலாம் சொன்னார்கள், அதற்கு நபியவர்கள் மறுமொழி கூறவில்லை, பிறகு உளு செய்து விட்டு மறு மொழி கூறினார்கள்.

தூய்மையான நிலையில் தவிர (வேறு எந்த நிலைகளிலும்) அல்லாவை திக்ர் செய்வதை நான் வெறுக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஹாஜிர் பின் குன்புத்(ரலி) அறிவிக்கிறார்கள்,
இமாம் அபுதாவுத்(ரஹ்)(16),இமாம் இப்னுமஜா(ரஹ்)(344),இமாம் நஸயி(ரஹ்) (38),இமாம் முஸ்னத் அஹ்மது(ரஹ்)(18259,19833), இமாம் தாரமீ(ரஹ்) (2527) இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்),இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹாகிம்(ரஹ்).

இமாம் ஸிந்தி(ரஹ்) அவர்களின் விளக்கம்:

ஸலாம் கூறுவதற்கு உளு தேவையில்லை என்றாலும், ஸலாம் என்பது அல்லாவின் பெயர்களும் ஒன்றாக இருப்பதால் தூய்மை அடைந்த நிலையில் பதில் சொன்னார்கள்.

இதிலிருந்து,

எல்லா நிலை என்பது நபி(ஸல்)  அவர்கள் எல்லா நிலையில் திக்ரு செய்வார்கள் ஆனால் அவர்கள் தூய்மையான நிலையில் இருப்பார்கள்,

அதே போல் இதில் எல்லா தோல் எனக் கூறப்பட்டாலும் அது பன்றியை தோல் தவிர, ஏனென்றால் ஹரமான  பன்றியை விற்பனைச் செய்யகூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள போது பன்றித் தோல் மட்டும் எவ்வாறு வியாபரம் செய்ய முடியும். பன்றித் தோல், பன்றியில் இல்லை எனக் கூறமுடியமா? அது எவ்வாறு வியாபரத்திற்கு பொருந்தும்.

எனவே பன்றியும், பன்றித்தோலும், பன்றியில் உள்ள எந்த பாகமும் வியாபரத்திற்கு கூடாது


விமர்ச்சனமும் விளக்கமும்:

பன்றி - மறுபடியும் நியாபடுத்த முயலும் விதாண்டாவதமும் அதற்கு தக்க நமது பதில்களும்:


மேல் உள்ள வீடியோவை அனுப்பி, மறுபடியும் பன்றியில் தோல், பன்றியின் இதயம், பன்றியின் இரத்தம் ஹலால் என தறுதலை  பீஜே வின் கும்பல் அனுப்பி இருந்தது: 

http://www.youtube.com/watch?v=qiXx9fmMc3U

அதற்கு நமது பதில்:

நீங்கள் பதித்த வீடியோவில் 5:36-ல் பன்றி எல்லாம் ஹராம் என்று சொல்லும் போது பன்றித்தோல்,பன்றி இரத்தம்,பன்றி இதயம்  மட்டும் எப்படி ஹலால் ஆகும் ,மேலும் நீங்களே நன்றாக வீடியோவைப் பார் யார் பொய் சொல்கிறார், சும்மா அவசரப் பட்டு கத்தாதே, இது உன் பீஜேவின் மத்ஹப் வெறி மற்றும் உன் உன் வாய்ச் சாடல் மேலும் நான் பதித்த ஆதாரத்தை உறுதிபடுத்துக்கின்றது. மேலும் வீடியோவில் பன்றி இரத்தம் ஹலால் பார்க்க 7:38-ல் பன்றியின் இரத்தம் ஹலால் சொல்லும் காட்சியையும், அடுத்து பன்றியின் இதயம் ஹலால் என்று சொல்லும் காட்சி வீடியோ 11.00-ல் காட்சியையும் பதிவு செய்யப்பட்டுள்ளது,

பீஜே, பன்றியில் எல்லாமே ஹராம் என்று சொல்லி, மற்றொரு இடத்தில் பன்றியின் இதயம், ரத்தம், தோல் ஹலால் என்று சொல்வதை அவரின் அறியாமையை வெளிப்படுத்தி உள்ளது, 

மேலும் மேலுள்ளவற்றில் வீடியோவிலிருந்து பீஜே கூறியதவது, அல்லாஹ் தனது திருமறையில், பன்றியின் இறைச்சிமட்டும் ஹராம் என்று சொல்லியுள்ளான், அதனால் பன்றியை பண்ணையில் வளர்கலாம், மேலும் அதன் இரத்தம், இதயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவே அது உயிர்காக்க உதவும் என கப்ஸாவை அளந்து விட்டுள்ளார்,  சரி விசயத்திற்கு வருவோம்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த இறைவன்மீது சத்தியமாக! விரைவில் (உலகஅழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா (அலை) உங்களுடைய நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால்அதை வாங்கிக் கொள்ள எவரும் இருக்கமாட்டார்.இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் புஹாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்), இமாம் அபூதாவுத்(ரஹ்),இமாம் மஜா(ரஹ்),போன்ற பல இமாம்கள் இந்த ஹதிஸை பதிவு செய்துள்ளார்கள்

பன்றி  உயிர்காக்க உதவும்  சொல்லும் பீஜே, அதை வளர்கலாம் என்று சொல்லும் பீஜே ஆனால் நபி(ஸல்) அவர்களுக்கும் மாற்றமாக சொல்லி உள்ளார், என்பது உங்களுக்கு ஏன் தெரியுமல் உள்ளது?. அதை உயிர்காக்க வைத்துள்ளான் என்றால் உயிர்காக்க உதவும் ஒன்றை ஏன் ஈஸா(அலை) அவர்கள் கொல்ல வேண்டும், அல்லாஹ் ஏன் ஈஸா(அலை) அவர்களின் மூலமாக கொல்ல ஏற்பாடு செய்துள்ளான், அதன் இதயத்தின் மூலம், அதன் இரத்தத்தின் மூலம் பயன் இருக்கும் என்று பீஜே கூறும் போது ஏன் அதை ஈஸா(அலை) அவர்கள் கொல்ல வேண்டும், பீஜே  போன்ற பெரும் பொய்யர்கள் இவ்வாறு சொல்லிவீர்கள் என்று தெரிந்து தான் அல்லாஹ், அதை ஈஸா(அலை) அவர்கள் மூலம் கொல்ல செய்து உள்ளான். பீஜே மறைமுகமான விசயத்தை அறிந்தவரா என்ன? 
ஈஸா(அலை) அவர்கள் பன்றியை கொல்ல மாட்டார்கள், அது பிஜேவாகிய எனக்கு வஹி வந்துவிட்டது என்பது போல், அதனால் அதை பண்ணையில் வளர்கலாம் என கண்மூடித்தனமாக பத்வா வழங்கி உள்ளார். அதையும் சரி என்று தலை ஆட்டிக்கிறீர்கள், யார் ஹதிஸை பின்பற்றுகிறோம் என்று வாய் அளவில் சொன்னால் போதாது, அதை அமல் படுத்த வேண்டும், தற்போது நீங்கள் பீஜே பின்பற்றுகிறீர்கள் தவிர, அல்லாவையும் அவன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையும், நீங்களும் உங்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் பின்பற்ற வில்லை நன்றாக அறிய முடிகிறது. நீங்கள் தான் பீஜே வின் மத்ஹப் பின்பற்றுகின்றீர்கள் என்பது உறுதியாகின்றது.

மேலும் பன்றியின் இரத்தம் தூய்மையானவையா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,பகைடக்காய் ஆட்டம் விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரை போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்))

பன்றியின் இறைச்சியை மட்டும் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை, பன்றியின் இரத்தத்தையும் சேர்த்து கூறியுள்ளார்கள், அதை போய் உடலுக்குள் ஏற்றலாம் என்று சொல்பவனை என்ன என்று கூறுவது? நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு பன்றி இறைச்சியும், பன்றி இரத்தமும் அசுத்தம் என்று சொன்னால் இவ்வாறு கூறி இருப்பார்கள்.

இந்த ஹதிஸிற்கு இமாம்கள் விளக்கம் கொடுக்கும் போது, பன்றி ஒரு அசுத்தமான விலங்கு,  முஸ்லிம் அதன் எந்த பொருளையும், பாகத்தையும் பயன்படுத்த கூடாது, அதன் இறைச்சியை தொடவும் கூடாது, உண்ணவும் கூடாது மற்றும் அதன் இரத்தமும் மிகவும் அசுத்தமானது, அதனையும் தொடவும் கூடாது.



புதன், 1 ஆகஸ்ட், 2012

இன்றைய முஸ்லிம்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹீ

அளவற்ற அருளானலும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்,

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காகஅருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது  ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்(33:56)

அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலாஇப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக்அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலிஇப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்

அஸ்ஸலாமு அலைக்கும் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

முன்னுரை:

சகாபாக்களை பற்றி தற்போது பின்பற்ற கூடாது என்று ஒரு அமைப்பு பகிரங்கமாக அறிவிப்பு செய்துள்ளது, அதற்காக நபித் தோழர்களும் நமது நிலையும் என்ற கட்டுரை ஒன்றை தொகுத்துள்ளார்கள்,

வைக்கப்படும் விமர்சனங்கள்:

1) வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை
2) வஹீக்கு முரணான நபித் தோழர்களின் நடவடிக்கைகள்

கட்டுரையின் நோக்கம்:

நபி(ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் தோழர்(ரலி) மீதும் சுமத்தப்பட்ட அவதூறுகளும் அதற்கு நமது பதில்களும் கட்டுரைக்கு விமர்ச்சனங்களுக்கு விளக்கமும்.

நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவது கட்டாய கடமையாகும்::

அல்லா திருமறையில் நபி(ஸல்அவர்களுக்கு வழிப்பட்டவர்அல்லாவுக்கு வழிபட்டவரவார்:
இன்னும் அவர்கள்தங்கள் இறைவனுடைய வசனங்கள் கொண்டு நினையூட்டப்பட்டால் செவிடர்களையும்குருடர்களையும் போன்று அதில் மீது விழமாட்டார்கள்(25:73)

நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாவுக்கும்அவனுடைய தூதருக்கும் கீழ்படிங்குள்(8:1)

முஃமீன்களேநீங்கள் அல்லாவுக்கும்அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்நீங்கள் செவிமடுத்து கொண்டே அவரை புறக்கணிக்காதிர்கள்(8:20)

ஈமான் கொண்டவர்களேநீங்கள் அல்லாவுக்கும் வழிபடுங்கள்இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள்உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள்(47:33)

இன்னும் அல்லாவுக்கும் வழிபடுங்கள்இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள்,எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்இதனை நீங்கள் புறக்கணித்து விட்டால்நம் கட்டளைகளை தெளிவாக விளங்குவது நம் தூதர் மீது கடமையாகும் எனபதை புரிந்து கொள்ளுங்கள்(5:92)

அல்லாவுக்கும் வழிபடுங்கள்,இன்னும் ரஸீலுக்கும் வழிபடுங்கள் என்று நபியே நீர் கூறுவீராகநீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட இத்தூது செய்தியை அறிவிப்பு செய்வது தான்இன்னும் உங்கள் மீதுள்ளா கடமையானது உங்கள் சுமத்தப்படி வழிபடுவானதுஎனவே நீங்கள் அவருக்கு கீழ்படிந்து நீங்கள் நேர்வழிப் பெறுவீர்கள்இன்னும் நம் தூதை தெளிவாக எடுத்துரைப்பது தவர வேறெதும் தூதர்மீது இல்லை(24:54)

அல்லாஹ்வை நீங்கள் வழிபடுங்கள்:அவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்எனக்கு வழிபடுங்கள்(71:3)

மேலும் அல்லாவும்அவனுடைய தூதரும் ஒரு காரியதை பற்றி கட்டளையிட்டால்அவர்களுடைய அக்காரியத்தில் அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கும்பெண்ணுக்கும் உரிமை இல்லைஆகவே அல்லாவுக்கும் அவனுடைய ரஸீலுக்கும் மாறு செய்தால் நிச்சியமாக அவர்கள் பகிரங்க வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்(33:36)

அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலைஅவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)

மேலும் (நபியுடையஇதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர் கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).

  
நபி(ஸல்) அவர்களின் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அதற்கு நமது பதில்களும்:

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், நானும் பேரிச்ச மரங்களின் உச்சியிலிருந்த சிலரை கடந்து சென்றோம். அப்போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள், அதற்கு அங்கிருந்த பெண் மரங்களுடன் ஆண்மரங்களை ஒட்டு சேர்க்கை செய்து செய்து மகசூல் செய்கின்றனர் என்றார்கள், அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இதனால் பயன் ஏதவது உண்டாகுமன நான் கருதவில்லை,என்றார்கள். அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்) கூறியதை தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் ஒட்டு சேர்க்கை செய்வதை விட்டு விட்டார்கள், அல்லாவின் தூதர் முஹம்மது நபி(ஸல்)
 அவர்களிடம் இதைப் பற்றி தெரிவிக்கப்பட்ட போது அதனால் அவர்களுக்கு பயன் இருந்தால் அது செய்யட்டும் நான் என் யூகத்தை கூறினேன், என் யூகத்தைக் கொண்டு என்னை குற்றம் பிடிக்காதீர்கள், ஆனால் அல்லாவைப் பற்றி ஏதாவது அறிவித்தால் அதை எடுத்து கொள்ளுங்கள். நிச்சியமாக கண்ணியமிக்க மற்றும் மகத்துவம்மிக்க அல்லாஹ்வை பற்றி பொய் சொல்ல மாட்டேன் என்றார்கள், என தல்ஹா பின் உபைதில்லா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (இமாம் முஸ்லிம்(ரஹ்)

நமது பதில்:

இது விமர்ச்சிக்கப்பட்ட ஹதிஸ்

இதில் இக்ரிமா பின் அம்மார் என்பவர் இடம் பெருகிறார், இவர் அதிகமாக நபிமொழிகளில் குளருபடி செய்ய கூடியவர், அதிகமாக தவறு செய்ய கூடியவர், என இம்மாம் அஹமது அஹமது(ரஹ்), இமாம் எஹ்யா பின் ஸயித் கத்த(ரஹ்), இமாம் ஸலிஹ் இப்னு முகம்மது ஹசனி(ரஹ்), இமாம் அல்லாமா இப்னு ஹிரா(ரஹ்),இமாம் அல்லாமா இப்னு அம்மார்(ரஹ்), அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) கூறுகிறார்கள்,

இக்ரிமா பின் அம்மார் இவர்களின் ஹதிஸை பலர் ஏற்றலும், ஆனால் இவர் மீது பலரால் விமர்ச்சிக்கப்பட்டுள்ளார், இவருடைய ஹதிஸ் ஏற்க தக்கது அல்ல.

இமாம் பைஹகி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், இவர் அறிவு வயதான காலத்தில் மிகவும் மோசமாகிவிட்டது,மிகவும் அறிவில் மிகவும் பலகினமானவர், இவர் அறிவிக்கும் ஹதிஸை யாரும் ஏற்க கூடாது என கூறியுள்ளார்கள்

இமாம் இப்னு ஹஜ்ம் அல் அன்ட்தலுசி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இக்ரிம பின் அம்மார் பலகினமானவர்கள்,

இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், மக்கள் இவர் கூறும் எந்த வார்த்தையும் ஏற்கமாட்டார்கள் அத்தவரி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இவர் அறிவிக்கும் ஹதிஸில் பல தவறுகளும், குளருபடியும் உள்ளது.

மேலும் இமாம் அபு ஹாதிம்(ரஹ்), இமாம் ஹபிழ் அல் அலாய்(ரஹ்), இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்), இமாம் ஜலலுதீன் அஸ் சூத்தீ(ரஹ்), இமாம் சப்ட் அல் ஹஜ்மி(ரஹ்), இமாம் அபு ஜிர அல் இராக்கி(ரஹ்), இமாம் அல் கஃரஜி(ரஹ்) போன்றவர்கள் இவர் அறிவித்த ஹதிஸ் ஏற்க தக்கது அல்ல,

மேலும் இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் இவர் அறிவிக்கும் ஹதிஸ் முத்தரிப் தரத்தில் தான் பதிவு செய்து உள்ளார்கள் என இமாம் பைஹகி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இதில் மற்றொரு வழியாக சிம்மாக் இப்னு அர்ப் இடம் பெறுகிறார் அவர் மிகவும் பலவினமானர் என பதின் மூன்று இமாம்கள் குறை கூறியுள்ளர்கள்.

மேலும் அம்மாத் பின் ஸலிமா இடம் பெறுகிறர், இவர் ஹதிஸை அதிகமாக தவறு செய்யக் கூடியவர். நினைவாற்றல் குறைந்தவர்.மறதியாளர் என விமர்ச்சிக்கப்பட்டுள்ளார்.

முஜனித் பின் ஸயித் இடம் பெற்றுள்ளார், இவர் மிகவும் பலவினமானவர் என பத்து இமாம்கள் இவரை விமர்சனம் செய்து உள்ளர்கள், இவர் ஹதிஸ் ஏற்கலாகது. என விமர்ச்சிக்கப்பட்டவர்,

இவ்வளவு விமர்ச்சிக்கப்பட்ட நபர்கள் இருந்த இந்த ஹதிஸை போய் ஆதரமாக காட்டி நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டாம் என ததஜ தலைவர் கூறுவது சரிதானா?

இதை எல்லாம் அவர் எது சொன்னாலும் சரி என கண்ணை மூடிக்கோன்டு பின்பற்று கிறீர்களே இது உங்களுக்கு நியமாக தெரிகிறதா?

சரி விமர்ச்சிபவர்கள் அடிக்கடி ஒரு பஞ் வசனம் ஒன்று சொல்லும், ஒரு உதரணத்திற்கு  விமர்ச்சிபவர்கள் விசயத்தில் வருவோம், குரானுக்கு மாற்றமாக பலமான ஹதிஸ் இருந்தல் ஏற்க மாட்டோம் என வீர வசனம் சொன்னது எல்லாம் உங்களுக்கு தெரியும்,

இது விமர்ச்சிபவர்கள்பலமான ஹதிஸ் என வைத்து கொள்வோம்(பலவினமானது தான் ஆனால் ஒரு வேளை விமர்ச்சிபவர்க்கு மட்டும்),

அல்லா தனது வேதமாகிய திருகுர்ஆனில் தனது ஹபிப் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கூறுகிறான். அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை) அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)

மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர் கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).

இதில் அல்லா உலக விசயத்தை மட்டும் கூறவில்லை, ''எதையும்'' என்ற வார்த்தையை அல்லா பயன் படுத்துகிறான். அது உலக விசயமாக இருக்கட்டும், அல்லது மார்க்க விசயமாக இருக்கட்டும். எந்த வார்த்தையும் அடங்கும்.

அல்லாவின் வார்த்தைக்கு மாறாக இருக்கும் இந்த ஹதிஸ் எடுத்து கொள்ளலாமா?

கண்மூடித்தனமாக விமர்ச்சிபவர்களை பின்பற்றினால் நரகம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

பரீரா என்ற பெண் முகீ என்பவரைத் திருமணம் செய் திருந்தார். அடிமையாக இருந்த பரீரா விடுதலை செய்யப் பட்ட பின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீ அதிக அன்பு வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்க முடிய வில்லை. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறி னார்கள். அப்போது பரீரா “இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை யில்லை; பரிந்துரை தான் என்று கூறினார்கள். அப்படியா னால் எனக்கு முகீ வேண்டாம் என்று பரீரா கூறி விட்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ என்ற அடிப் படையில் இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஒன்றைக் கூறினால் அதை ஏற்காமல் இருப்பது குற்றமாகாது என்பதை நாம் இதிலிருந்து அறிகிறோம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான விஷயங் களிலேயே அனைத்தையும் பின்பற்றத் தேவையில்லை; வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் எனும் போது வஹீயுடன் தொடர்பில்லாத நபித் தோழர்களையோ, நல்லறிஞர்களையோ பின்பற்றுவதற்கு மார்க்கத்தில் எப்படி அனுமதி இருக்கும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



நமது பதில்:

இதில் நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடவில்லை, அப்படி நபி(ஸல்) கட்டளை இட்டிருந்தால் நிச்சியாமாக பரீரா(ரலி) அவர்கள் ஏற்று தான் இருக்க வேண்டும்.

ஏனென்றால் அல்லா கூறுகிறான்:

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((திருகுர்ஆன் 33:36))

திருமண விசயத்தில் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டால் ஏற்ற கொள்ள வேண்டும் என்று ஆதாரம் உள்ளதா?ஆம்

நபி(ஸல்) தனது மைந்துணியான ஜைனப்(ரலி) அவர்களுக்கு,தனது வளர்ப்பு மகனும்மற்றும் தன்னிடம் அடிமையியாருந்து பின்னர் உரிமைவிடப்பட்ட ஸைத் பின் ஹாரிதா(ரலி) அவர்களுக்கு மணமுடிக்க நிச்சியம் செய்ய தீர்மானிக்கின்றார்கள், நபி(ஸல்) அவர்களின் இந்த முடிவை கேள்விப்பட்ட ஜைனப்(ரலி) அவர்கள் செய்தறியாது திகைத்து போய் விடுகின்றார்கள். இன்னும் நான் கண்ணியமான குடும்பத்திலிருந்து வந்த பெண் அடிமையாயிருந்து விடப்பட்ட ஒருவரை மணந்து கொள்ள இயலாது என்பதையும் தெரிவிக்கின்றார்கள் . இருவரும் மணமுடித்து கொண்டால் இருவரது வாழ்வு அமைதியாக கழியுமா என்பதிலேயே சந்தேகம் ஏற்ப்பட்டது.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதனை நான் முடிவு செய்துவிட்டேன், அதற்கு ஜைனப் நீங்கள் சம்மதித்து தான் ஆக வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறிவிடுகின்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சம்மந்தம் தெரிவிக்கும் முன்பாகவே அல்லா அவர்களுக்கு கீழ்கண்ட வசனம் இறக்கி அருளப்படுகிறது

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((திருகுர்ஆன் 33:36))(ஜைனப் பின் ஜக்ஸ்(ரலி) வரலாறு, இமாம் அஹ்மது(ரஹ்) மற்றும் அனைத்து திருகுர்ஆன் விளக்க உரை)

நபி(ஸல்) அவர்களுன் கட்டளை இட்டவுன், அல்லா உடனே தமது கட்டளையை இறக்குகின்றான், நபி(ஸல்) அவர்களின் முடிவு தான் அல்லாவின் முடிவாகும். என்பதை உணர்ந்து கொள்ளுங்கள், பரிரா(ரலி) அவர்கள் இது மார்க்கத்தின் கட்டளையா என்று கேட்கின்றார்கள், நபி(ஸல்) அவர்கள் கட்டளை என்று கூறி இருந்தால் பரிரா(ரலி) அவர்கள் கட்டாயம் ஏற்று இருப்பார்கள், அதனால் தான் இது மார்க்கத்தின் கட்டளையா என்று பணிவுடன் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை தான் செய்தார்கள் தவிர கட்டளை இடவில்லை, அப்படி கட்டளையிட்டார்கள் என்றால் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். பரிரா(ரலி) இறைவனின் வசனத்தை நன்கு அறிந்து வைத்ததின் காரணமாக தான் இது மார்க்கத்தின் கட்டளையா என்று பணிவுடன் கேட்டார்கள்.

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது “இது உடும்பு இறைச்சி என்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் “அல்லாஹ் வின் தூதரே! இது ஹராமா? எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லை என்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார் கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டி ருந்தார்கள். (ஹதீஸின் கருத்து)
நூல் : புகாரி 5391, 5400, 5537
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை என்பதால் தான். எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.
நமது பதில்:

நபி(ஸல்) அவர்கள் உடும்பு கறி சாப்பிடத்தற்கு காரணம்:

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் உடும்புகள் நிறைந்த பள்ளமான பகுதியில் வசிக்கிறேன். உடும்புதான் என் குடும்பத்தாரின் பொதுவான உணவாகும்'' என்று கூறினார்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் அந்தக்கிராமவாசியிடம், "நபியவர்களிடம் மறுபடியும் கேள்'' என்று சொன்னோம். அவர் மறுபடியும்கேட்டார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. இவ்வாறுமூன்று முறை நடந்தது.மூன்றாவது முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்து "கிராமவாசியே! அல்லாஹ், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரில் ஒரு கூட்டத்தாரைச் சபித்தான்; அல்லது கோபப்பட்டான்.அவர்களைப் பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணிகளாக மாற்றிவிட்டான். எனவே, இது (உடும்பு) அவர்களாயிருக்குமோ என்பது எனக்குத் தெரியாது.எனவே, அதை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டமென)த் தடைசெய்யுமாட்டேன்'' என்று கூறினார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

நபி(ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு மிகவும் இரக்கம் காட்டக்கூடியவர்கள். அகில உலகத்திற்கு உள்ள மனித மற்றும் ஜின் இனத்திற்கும் இறுதி இறைதூதராக அனுப்பப்பட்டார்கள், பனு இஸ்ராயீல் சமுதாயத்தின் கூட்டத்தார்கள் அப்போது அவர்கள் இருந்தாலும் தற்போது அவர்கள் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினர்களின் சமுதாயத்தில் வாழக்கூடியவர்கள் ஆவார்கள் அந்த மனிதர்களா இருக்குமோ என அச்சத்தில் தான் அதனால் அதை உண்ண மறுத்துவிட்டார்கள்.
.

நபி(ஸல்) அவர்களின் தோழர்(ரலி) மீதும் சுமத்தப்பட்ட அவதூறுகளும் அதற்கு நமது பதில்களும்:

முன்னுரை:

சகபாக்கள்(ரலி) அவர்களைப்பற்றி முதலில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும், சகபாக்கள் சிலர் வியாபரம் செய்ய கூடியவர்களாகவும், சிலர் வெளியூர் பயணத்திலும், சிலர் விவாசயங்களையும், சிலர் அடிமைகளாகவும், சிலர் தொழில்களை செய்பவர்களாகவும் இருந்தார்கள், எல்லா நேரங்களிலும் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கவில்லை, நபி(ஸல்) அவர்களிடம் இருந்து சில நேரங்களில் அவர்களுக்கு அந்த நபிமொழி கிடைக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் பிறகு நபி(ஸல்) அவர்களிடமிருந்து அந்த நபிமொழி கிடைத்தால் உடனே அமல் செய்ய கூடியவர்களாக இருந்தார்கள்.

இதற்கு நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் பேருரை சம்பவம் நமக்கு எடுத்துகாட்டாகும்.


இங்கே  வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்'என்றார்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்))

சில சகபாக்கள்(ரலி) அவர்கள்  இந்த செய்திகிடைக்காமல் இருத்திருக்கலாம், அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் வந்தவர்கள் வராதவருக்கு இச்செய்தியை கூறிவிடுங்கள் என்றார்கள்,

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

முத்தலாக்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா?
நபிவழியை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் போது நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆகும்?

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள்

வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரண்டு கலீபாக்களும் அதைச் செயல்படுத்தி யுள்ளனர். ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் சுயமாக இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள்.
ஏதோ ஒரு காரணத்தால் நபிவழியைக் கூட சில நபித் தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
எனவே நபித் தோழர்களின் எல்லா நடவடிக்கையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் தான் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்

தராவிஹ்:

ஆரம்ப காலத்தில் தராவிஹ் பற்றி நாம் கூறும் போது இருபது ரக்கத்து இல்லை என்று மறுத்தோம்.
உமர்(ரலி) அவர்களின் காலத்தில் 20 ரக்கத்து தொழப்பட்டாலும் நாம் அதை ஏற்று கொள்ள கூடாது என்று கூறினோம்

நமது பதில்:

நபி(ஸல்) அவர்களின் சுன்னத் என்றால் என்ன என்று தெரியமால் இருப்பவர்கள் தான் இது போல் கேள்வி கேட்பார்கள், நபி(ஸல்) ஒன்று சொல்லிருக்க வேண்டும், செய்து காட்டிருக்க வேண்டும் அங்ககரித்திருக்க வேண்டும், இது மூன்றும் இல்லாமல் இருந்தால் தான் அது பித் அத் ஆகும், பொய்யார்கள் நபி(ஸல்) செயலை மட்டும் எடுத்துக் கொண்டு நபி(ஸல்) சொல்லும், அங்கிகாரத்தையும் அவமரியாதை செய்கிறார்கள், கீழுள்ள கட்டுரையை பொறுமையாக படியுங்கள் அதற்கு பிறகு சகபாக்கள்(ரலி) அவர்கள் மீது அவதூறு சொன்னவர்களை அடையாளம் காணுங்கள்

மேலும் நபி(ஸல்) அவர்கள் பின் பற்ற சொன்ன நான்கு கலீபாக்கள்(ரலி) யார் எனபதையும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்


நபி(ஸல்) அவர்கள் பின்பற்ற சொன்ன நான்கு கலிபாக்கள்(ரலி) :

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு கண்கள் நீரைச் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்பொது யாரசூலுல்லாஹ்! இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே , எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித் தோழர்கள் சொன்னார்கள். அப்போது கருப்பு இனத்தைத் சார்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிப்படுங்கள். உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும், எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள்.மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டு பண்ணப்படுபவை யாவும் வழி கேடுகளேயாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இர்பாள் பின் சாரியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இமாம் அபூதாவுத்(ரஹ்), இமாம் அஹமத்(ரஹ், இமாம் இப்னுமஜா(ரஹ்))

முதலவதாக அபூபக்கர் பின் குகஃபா(ரலி) அவர்கள்:

அபூபக்கர்(ரலி) அவர்கள் சிறப்புகள்:

எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்(அல் குர்ஆன் (9:88)),

இதில் முதன்யானவர் அபூபக்கர்(ரலி) அவர்கள்.

உமர்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ''ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை நான் முந்த வேண்டுமாயின், இந்த நாளில் முந்திவிட வேண்டியதுதான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதரத்தில் நான் பாதியைக் கொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், உமரே! உமது குடும்பத்திற்காக என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். 'இதுபோன்ற ஒரு பங்கை வைத்து விட்டு வந்துள்ளேன்' என்று நான் பதிலளித்தேன்.அபூபக்கர்[ரலி] அவர்கள் தன்னிடமுள்ள பொருளாதாரம் அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக எதை விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவர்களுக்காக விட்டு வந்திருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக!எதிலும் அபூபக்ரை முந்த முடியாது என நான் எண்ணிக்கொண்டேன்.இமாம்திர்மிதி(ரஹ்),இமாம் அபூதாவூத்(ரஹ்)

"தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் எற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு" என்னும் (திருக்குர்ஆன் 3:172 -வது) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) ஓதிவிட்டு என்னிடம், 'என் சகோதரி மகனே! உன் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களும் (என் தந்தையும் உன் பாட்டனாருமான அபூ பக்கர்(ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம். உஹுத் நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோது இணைவைப்பவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி(ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) 'அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்?' என்று கேட்டார்கள். (உஹுதில் பங்கெடுத்த) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர்" என்று கூறினார்கள்.அவர்களில் அபூ பக்கர்(ரலி) அவர்களும், ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களும் இருந்தனர். என உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் .(இமாம் புகாரி(ரஹ்)) (இமாம் இப்னு கஸீர்(ரஹ்) திருகுர்ஆன் விளக்க உரை)

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது,(நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார்.அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.(திருக்குர்ஆன் 9:40)
இதில் தோழர் எனபது அபூபக்கர்(ரலி) அவர்களை தான் குறிக்கும் என பல இமாம்களும், பல திருகுர்ஆன் விளக்கவுரைகாளர்களும் கூறியுள்ளார்கள்


ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்கள் மறுபடியும் தம்மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள், 'இறைத்தூதர் அவர்களே! சொல்லுங்கள். நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால்...? என்று -தான் வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற கருத்தில் - கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூ பக்ரிடம் செல்' என்று பதிலளித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்),

இதில் எனக்கு பிறகு (ஈமானின் வழிகாட்டி) அபூபக்கர் சித்திக்(ரலி) என்று நபி(ஸல்) அவர்கள் சுட்டி காட்டினதை சொன்னது எல்லாம் உங்கள் கண்கள் திறந்து படியுங்கள்

எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதில் முதலவதாக நபி(ஸல்) அவர்களைப் பார்த்த கலிபாக்கள், சகபாக்கள்(ரலி) அவர்கள் தான் வருவார்கள்,அப்போ அவர்களின் சுன்னாவை பின்பற்றுவது ஒன்றும் தவறு ஒன்று இல்லை தானே, ஏனென்றால் இதிலிருந்து முதல் கலிபாக்கவாக இருந்த அபூபக்கர்(ரலி) அவர்களின் வழிமுறையை பின்பற்றலாம் என உறுதியாகிறது. மேலும்  அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூ பக்ரிடம் செல்' என்று கூறினார்கள், மேலும்நபி(ஸல்) கலிப்பாக்களைப் பற்றி கூறினாலும் அதில் அல்லாவை பொறுந்தி கொண்டவர்கள் தான் அதில் முதன்மையாளர்கள்  அபூபக்கர்(ரலி) ஆவார்கள்

இரண்டவதாக உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில், (பல்வேறு) பிரச்சினைகளில் சரியான தீர்ப்பு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள்.என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்:உங்களுக்கு முன்பிருந்த பனூ இஸ்ராயீல்களில் இறைத்தூதர்களாக இல்லாமலேயே (வானவர்களால்) அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள் இருந்துள்ளனர். அத்தகையவர்களில் எவரேனும் என் சமுதாயத்தில் இருந்தால் அது உமராகத் தான் இருக்கும். இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆனின் 22:52-வது வசனத்தில்) 'வலா முஹத்தஸின்' (முன் கூட்டியேஅறிவிக்கப்பட்டவரானாலும்) என்று (சேர்த்து) வாசித்துள்ளார்கள் (இமாம் புகாரி(ரஹ்).

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர,சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.திருகுர்ஆன் 3:159


இதில் அல்லா சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக!- நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். என்று கூறியது அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களை பற்றி கூறினது என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  இதை இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.

எனவே இதில் அல்லாவின் தூதர்(ஸல்)அவர்கள்பொறுப்படுத்தப்பட்டவர்கள் அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்கள் ஆவார்கள்,

அல்லா இதைப்பற்றி கூறுகிறான் சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். இதில் பொறுப்பேற்படுத்தவர்கள் அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்கள் ஆவார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மூலமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((திருகுர்ஆன் 33:36))

அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) பின்பற்றுவது நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தாகும்:

நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி  அபூபக்கரையும்(ரலி)உமரையும்(ரலி)சுட்டிக் காட்டினார்கள்  என ஹுதைபா இப்னுல் எமான் (ரலி) அறிவிக்கிறார்கள்.(இமாம் அபூதாவூத்(ரஹ்), இதை இமாம் திர்மிதி(ரஹ்) ஹதீஸ் இடம் பெற்றுள்ளது) இது ஹசன் தரத்தில் இமாம் இப்னு மஜா(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்,


அல்லாஹ்,உண்மையை உமருடைய(ரலி) நாவில் குடி வைத்திருகிறான்.அவர் உண்மையையே பேசுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்(இமாம் அபூதாவுத்(ரஹ்), இமாம் திர்மதி(ரஹ்), இமாம் இப்னு மஜா(ரஹ்), இமாம் ஹாகிம்(ரஹ்)

அல்லாஹ்,உண்மையை உமருடைய(ரலி) நாவிலும், இதயத்திலும் குடி வைத்திருகிறான்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்(இமாம் அஹமது(ரஹ்), இமாம் பஜ்ஜார்(ரஹ்), இமாம் தப்ரானி(ரஹ்)).

அல்லாவே கூறுகிறான் உமர்(ரலி) நாவிலும் இதயத்திலும் உண்மையை வைத்திருக்கிறோம் எனவே உமர்(ரலி) அவர்களை விமர்ச்சிபவர்கள், அவரை பின்பற்ற மாட்டோம் எனக் கூறுபவர்கள் அல்லாவை பயந்து கொள்ளுங்கள்.

எனவே நபி(ஸல்) அறிவித்தப்படி அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களும் அந்த கலிபாக்கள் இடத்தில் இடம் பெறுகிறார்கள், எனவே அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டும் நபி(ஸல்) அவர்களின் கட்டளை.


மூன்றவதாக உஸ்மான் பின் அஃப்பான்(ரலி) அவர்கள்

நபி (ஸல்) அவர்கள் (வருங்காலத்தில் ஏற்படப்போகும்) ஒரு குழப்பத்தைப் பற்றி கூறிவிட்டு, அது விரைவில் சம்பவிக்கும் என்றும் கூறினார்கள். அப்போது தலையில் முக்காடிட்ட ஒரு மனிதர் சென்றார். அந்தக் குழப்பம் சம்பவிக்கும் நாளில் இவர்தான் நேர்வழியில் இருப்பார். (இவருக்கு எதிரானவர்களே வழிகேட்டில் இருப்பார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உடனே பாய்ந்து சென்று (முக்காடிட்டுச் சென்று கொண்டிருந்து) உஸ்மானைப் பிடித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து ‘இவரையா சொன்னீர்கள்’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘இவர் தான்’ என்று கூறினார்கள் என கஃபு இப்னு உஜ்ரா (ரலி) கூறினார்கள்.(இமாம் திர்மதி(ரஹ்) இமாம் இப்னு மஜா(ரஹ்)) இமாம் இப்னு மஜா(ரஹ்) இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதிஸ் ஸஹிஹ்வானது.

உஸ்மான்(ரலி) அவர்களை யாரெல்லாம் எதிர்கின்றார்களோ அவர் வழிகேட்டில் இருப்பார்கள்,

இதில் தற்போது முதன்மையானவர்கள் ராபிழாக்கள், அப்பறம் என்ன சொல்லவே வேண்டியதில்லை நமக்கிடையில் வாழும் ததஜ ஆவார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்

நபி(ஸல்) அறிவித்தப்படி உஸ்மான்(ரலி) அவர்களும் அந்த கலிபாக்கள் இடத்தில் இடம் பெறுகிறார்கள், நேர்வழிப்பெற்ற கலிபாக்களைப் பின்பற்றுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதில் நபி(ஸல்) அவர்கள் உஸ்மான்(ரலி) நேர்வழியில் இருப்பார்கள் என்று கூறினார்கள்,நேர்வழியில் உள்ள உஸ்மான்(ரலி) அவர்களைப் பின்பற்றுவது கட்டாய கடமையாகும் என நபி(ஸல்) அவர்களின் கட்டளையாகும். எனவே உஸ்மான்(ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டும் நபி(ஸல்) அவர்களின் கட்டளை.

நான்கவதாக அலி பின் அபீதாலிப்(ரலி) அவர்கள்

நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேராளியும் உள்ளது. ஆகேவ, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்'' என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின்)உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும்
கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால்நினைவூட்டுகிறேன்.. என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும்கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் பெயரால் நினைவூட்டுகிறேன்.'' என்று (மூன்று முறை) கூறினார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இமாம் முஸ்லிம்(ரஹ்)

சரி.. நபி(ஸல்).குடும்பத்தை பின்பற்றுங்கள் என்றால் அது யாரை குறிக்கும்?

"வாருங்கள். எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் அழைப்போம்...''(3:61) எனும் இந்த வசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ(ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன்(ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, "இறைவா!இவர்கள்தான் என் குடும்பத்தார்'' என்று கூறினார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இமாம் முஸ்லிம்(ரஹ்)

நபி(ஸல்) அறிவித்தப்படி அலீ(ரலி),அவர்களும் அந்த கலிபாக்கள் இடத்தில் இடம் பெறுகிறார்கள், இதிலிருந்து அலி(ரலி) அவர்களையும் பின்பற்றுவது நபி(ஸல்) அவர்களின் கட்டளையும்.

விமர்ச்சனமும் அதற்கு விளக்கமும்

//அபூபக்கர் (ரலி) அவர்களின் தர்மம் பற்றி கூறும் ஹதீஸ் திர்மிதி 3608 ,அபூதாவூத் 1429 ,தாரமீ1601 ,ஹாகிம் 1442 , பைஹகீ 7313 போன்ற எண்களில் பதிவாகியிருக்கும் இந்த ஹதீஸ்-ல் ஹிஷாம் பின் சஅத் என்ற பலவீனமானவர்அறிவிப்பாளர்இடம் பெற்றுள்ளார் //ராஜ் முஹம்மது

நமது பதில்:

இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் ஹசன் ஸஹிஹ் தரத்திலும், இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்கள் ஹசன் தரத்திலும், இமாம் மிஷ்காத்(ரஹ்) அவர்களும் பதித்துள்ளர்கள்
நீங்கள் ஹிஷாம் பின் சஅத் வழியாக எடுத்து கொள்ள வேண்டாம், இதுவா உங்கள் பிரச்சனை

ஹிஷாம் பின் சஅத் அவர் இடம் பெறாமல் மற்றொரு வழியில் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவித்த ஹதிஸை அந்த ஹதிஸை எடுத்து கொள்ளலாமே!(கித்தாப் அல்ஹாவி அல் கபீர் 391), (மஜ்முஹ் பத்வா இப்னு தைமியா பக்கம் 117)

விமர்ச்சனமும் அதற்கு விளக்கமும்

//நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.// விமர்ச்சிபவர்கள்

நமது பதில்:

இந்த கருத்து விமர்ச்சிபவர்களாள் இது இட்டுகட்டப்பட்டது

கண்கள் கண்ணீர் வடித்து, உள்ளங்கள் நடுங்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இந்த உரை (உலகத்திலிருந்து) விடை பெற்றுச் செல்லும் உரை தான். எனவே எங்களிடம் என்ன உறுதிமொழி கேட்கிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற வழியில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகி விடுபவனைத் தவிர வேறு எவரும் அந்தப் பாதையிலிருந்து சருக மாட்டான். உங்களில் யார் (உனக்குப் பின்) வாழ்கிறாரோ அவர் ஏராளமான கருத்து வேறுபாடுகளைக் காண்பார்.
என் சுன்னத்திலிருந்தும்,நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்திலிருந்தும் எதை அறிகிறீர்களோ அதைப் பற்றிக் கொள்ளுங்கள். அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்!(உங்கள் தலைவர்) நீக்ரோ அடிமை என்றாலும் (அவருக்கு) கட்டுப்பட்டு நடப்பதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக மூமின் கடிவாளம் இடப்பட்ட ஒட்டகம் போன்றவனாவான். எங்கு இழுக்கப்பட்டாலும் அவன் இழுபடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்.(இமாம் இப்னுமஜா(ரஹ்)

முதலில் நேர்வழியில் நின்ற கலிபாக்களின் சுன்னதிலிருந்து எதை அறிகிறீர்களோ அதை பற்றி கொள்ளுங்கள், அதை தொடர்ந்து தான் நீக்ரொ அடிமை என்றாலும் என்று தான் வந்துள்ளது. இரண்டும் வேற வேற என்பதைத் தவிர ஒன்றே அல்ல, என்பதை சாதரணமாக படித்தவறுக்கு தெரியும்.

விமர்ச்சனமும் அதற்கு விளக்கமும்

//நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து``அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்..............நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை// விமர்ச்சிபவர்கள்

நமது பதில்:

அப்படி உங்கள் கருத்துபடி பார்த்தால்முதலில் நபி(ஸல்) அவர்கள் தான் வருகிறார்கள், அதனை தொடர்ந்து தான் மற்றவைகள் இடம் பெற்றுள்ளன, அப்படி நீங்கள் பொருள் கொள்வீர்களானாயில் உங்களை விட வழிகேட்டில் யாரும் இருக்க முடியாது.

ஏனென்றால் இதற்கு இமாம் இப்னு மஜா(ரஹ்)வில் இதற்கு முன் ஹதிஸை நீங்கள் படித்தீர்கள் என்றால் உங்களுக்கு சரியான விளக்கம் புரியும் அதாவது நீக்ரோ அடிமையாயினும் செவிமடுத்துக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! என கூறி அதற்கு பிறகு என் சுன்னத்தையும், நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்! அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்! என கூறப்பட்டுள்ளது.

அந்த ஹதிஸ் விவரம் கீழே வருமாறு

கண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளங்களை நடுங்கச் செய்யும் அரிய உரை ஒன்றை நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! (உலகிலிருந்து) விடை பெற்றுச் செல்பவரின் உரை போன்று நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள், எனவே எங்களிடம் (பலமான) உறுதிமொழியைப் பெற்றுக் கொள்ளுங்கள்என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘இறையச்சத்தையும், (உங்கள் தலைவர்) நீக்ரோ அடிமையாயினும் செவிமடுத்துக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவசியமாக்கிக் கொள்ளுங்கள்!எனக்குப் பின்னால் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள்! அப்போது என் சுன்னத்தையும், நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்! அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்! (மார்க்கத்தில்) பதிதாக தோற்றுவிக்கப்பட்ட காரியங்களைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன்.ஏனெனில் ஒவ்வொரு ‘பித்அத்தும்வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்..(இமாம் இப்னுமஜா(ரஹ்)

நபி(ஸல்) அவர்களின் சுன்னத் என்றால் சொல், செயல், அங்கிகாரம் இம்மூன்றும் தான் என்பதை அனைவரும் அறிந்த விசயம் தான், நபி(ஸல்) அவர்கள் செய்துகாட்டியதை மற்றும் ஏற்று கொண்டு, நபி(ஸல்) அவர்களின் சொல்லையும், அங்கிகாரியத்தையும் ஏன் மறுகின்றீர்கள், நபி(ஸல்) அவர்களின் சொல்லையும், அங்கீகாரியத்தையும் மறுத்தவர்கள், நாங்கள் நபி(ஸல்) வழிமுறையை பின்பற்றுகிறோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். நபி(ஸல்) அவர்களின் சொல்லையையும், அங்கீகாரத்தையும் மறுத்தவர்கள் எப்படி நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை தான் பின்பற்றுகிறோம் என என்று உங்களால் கூற முடிகிறது, நபி(ஸல்) அவர்களின் சொல்லையும், அங்கீகாரத்தையும் மறுக்கலாம்,, ஆனால் உங்கள் விமர்ச்சிபவர்களின் சொல்லை கேட்கலாம் என்று எந்த விதத்தில் இருந்து கொண்டு இருக்கீறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள், உங்கள் வாய் திறமையால் இன்று நீங்கள் வெற்றி பெறலாம், ஆனால் மறுமையில் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை மறுத்தவன் அல்லா முன் உங்களுக்கு தோல்வி தான் என்பதை மறந்து விடாதீர்கள்,

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

ருகூவின் போது தொடைகளுக்கிடையே இரு கைகளை வைத்தல்
                                                                     
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ருகூவு செய்யும் போது இரு கைகளாலும் முட்டுக் கால்களைப் பிடிப்பதற்குப் பதிலாக இரு கைகளையும் இணைத்து தொடைகளுக்கு மத்தியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பின்னர் இது மாற்றப்பட்டு இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.
ஆனால் ஆரம்ப கால நபித் தோழரும் மிகச் சிறந்த தோழர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பும் மாற்றப்பட்ட இந்த முறையிலேயே தொழுது வந்தார்கள் என்பதை நாம் காண்கிறோம்.

மற்ற சட்டங்களை விட தொழுகை தொடர்பான சட்டங்களை அனைத்து நபித் தோழர்களும் அறிந்திருக்க முடியும். ஏனெனில் தினமும் ஐந்து நேரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியதால் ஏதோ ஒரு தொழுகையில் கலந்து கொண்டவர் கூட இந்தச் சட்டத்தை அறிந்திட இயலும். ஆனால் அனைவரும் எதை அறிந்திருக்க முடியுமோ அந்த முக்கியமான ஒரு சட்டம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை.
மாற்றப்பட்ட விஷயம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியாததால் அவரது தொழுகைக்குப் பங்கம் ஏற்படாமல் போகலாம். அவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று சொல்வது சரி தானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமது பதில்:

அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அவரது தொழுகைக்குப் பங்கம் ஏற்படாமல் போகலாம் சொல்லும்  விமர்ச்சிபவர்கள்  உன் பொய்யை, அல்லா நன்றாக கவனித்து இருக்கின்றான் என்பதை மறந்து விடதே, நீ என்ன மறைவான விசயத்தை அறிந்துள்ளாயா!எப்படி இப்படி ஒரு பொய்யை சகபாக்கள்(ரலி) அவர்கள் மீது அவதூறு பரப்புகிறாய். இந்த பொய்யை எப்படி தான் ஒரு முஸ்லிம் தாங்கி கொள்ள முடியும்,விமர்ச்சிபவர்கள்  எது சொன்னாலும் சரியாக இருக்கும் என கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறீர்களே, உங்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா? யார் பொய் சொகிறார் என்பதை நன்றாக படியுங்கள், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த சகபாக்கள்(ரலி) அவர்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றி எவ்வாறு கூறுகிறார்கள் என்று படிவுங்கள், பிறகு சகபாக்கள்(ரலி) அவர்களின் சொல்வதை கேட்பீர்களா? இல்லை தற்போது வாழும்  விமர்ச்சிபவர்கள்  சொல்வதை கேட்பீர்களா?

அப்துல்லாஇப்னுமஸ்வூத்(ரலி)ப் பற்றி சகபாக்களின் கருத்து:

உருவ அமைப்பிலும், நடைமுறையிலும், நபி(ஸல்) அவர்களை ஏறக்குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களுக்கு உருவ அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்வூதை) விட வேறெவரையும் நான் அறியமாட்டேன்" என்று பதிலளித்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்கள்.(இமாம் புஹாரி(ரஹ்)

இதில் போக்கிலும், நடைமுறையிலும் என்பதை சகபாக்கள்(ரலி) பயன்படுத்துகிறார்கள், நபி(ஸல்) அவர்களின் போக்கிலும், நடைமுறையிலும் ஒருவர் இருப்பார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு அல்லாவுக்கும் அவனது தூதர் நபி(ஸல்) கீழ்படிந்து நடந்திருப்பார்கள் என்பதை சிந்தியுங்கள்.


இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் மட்டும் அறிவிக்கவில்லை, இதை அலி(ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்,

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸிற்கு விளக்கம் கொடுக்கும் போது, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் மட்டும் அறிவிக்கவில்லை,
அலி(ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள், ருகூவில் தொடைகளுக்கிடையேயும் கையை வைக்கலாம் அல்லது முட்டுகால் மீதும் கையை வைக்கலாம் (இரண்டும் நபிவழியாகும்)(இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்)


இப்னு முஸ்ஹிர் (ரஹ்) மற்றும் ஜரீர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில்
"ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்துகொண்டிருந்தபோது அவர்களுடைய விரல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருந்தைத இப்போதும்  நான் (இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது  என அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறினார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

இது அவர்களின் சந்தோசம் மற்றும் மகிழ்ச்சியின் வெளிபாடு ஆகும்,

இதே போல் நபி(ஸல்) அவர்களும் தனது மகழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்
ஏனென்றால் மூஸா (அலை) அவர்கள் எத்தகையவர் என்றால், அவர்கள் மாநிறமுடையவர்கள்; சுருள் முடிகொண்டவர்கள்; ஈச்ச நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தபடி இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) தல்பியா கூறியபடி இந்த (அல்அஸ்ரக்) பள்ளத்தாக்கில் இறங்கிய போது (அவர்களைக் நான் கண்டேன். அந்தக் காட்சியை)நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது  என்று சொன்னார்கள்.என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

இது போல் மற்றொரு சம்பவத்தையும் இஹ்ராம் முன் நறுமணம் பூசுதல் என்ற இந்த தொகுப்பின் கீழ் உள்ள தலைப்பில் காணலாம். இதே போல் ஏரளனமான சம்பவங்கள் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களைப் பின்பற்றி நடந்த சத்திய சகபாக்கள்(ரலி) அவர்களுக்கும் நடைப் பெற்று இருக்கிறது, நபி(ஸல்) அவர்கள் மீது எற்ப்பட்ட காதல் தான், அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறு செய்வதையும், அவர்கள் எவ்வாறு நடந்தார்களோ அதை அப்படியே செய்வதும் தான், தனது சந்தோசத்தையும் மகழ்ச்சியும் அவர்களின் மூலமாக வெளிபடுத்துவது ஆகும்.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவித்த ஹதிஸ் அனைத்தும் உண்மை:

குர்ஆன் இறங்கிய முறைப்படியே ஓத வேண்டுமென உங்களில் ஒருவர் விரும்பினால் அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் முறைப்படி ஓதிக்கொள்ளவும், அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் உங்களுக்கு எந்த ஒரு ஹதிஸை அறிவித்தாலும் அதனை உண்மை என நம்புங்கள் என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். மேலும் நான் ஓராண்டு காலம் வரை ஒவ்வொரு வியாழன் கிழமை அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து கொண்டு இருந்தேன், அக்காலத்தில் ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த விசயத்தையும் கூற நான் கேட்டதில்லை, ஒரு தடவை (அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி)) அவர்கள் கூறினார்கள் என்று தானாக நாவில் வந்தவுடன்,உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது,கண்களில் கண்ணீர் ததும்பியது, நெற்றில் வியர்வை துளிர்த்தது, நரம்புகள் புடைத்து கொண்டன, பிறகு அவர்கள் இன்சா அல்லா இவ்வாறு தான் கூறினார்கள் அல்லது இதை போன்றதை கூறினார்கள் அல்லது இதைவிட அதிகமாக அல்லது இதைவிட சற்று குறைவாக கூறினார்கள்  என்று கூறி முடித்தார்கள்(இமாம் அஹ்மத்(ரஹ்).

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

வாடகைத் திருமணம்

//வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதை களைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அலி (ரலி),
நூல் : புகாரி 4216, 5115, 5523, 6691

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ (புகாரி 75, 3756, 7270) அந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் எட்டவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு வாடகைத் திருமணம் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மார்க்கத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.

வாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்தகாலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா? என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜம்ரா, நூல் : புகாரி 5116

முத்ஆ எனப்படும் வாடகைத் திருமம் தடுக்கப் பட்டதை முதல் ஹதீஸ் கூறுகிறது. இந்த சமுதாயத்தின் மாமேதையான இப்னு அப்பாஸ் (ரலி) அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்ததை இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது//

நமது பதில்:

மேலோட்டமாக பார்க்கும் போது இப்னு அப்பாஸ்(ரலி) அறியாதவர்களாக இருந்தார்கள் என நமக்கு கேள்வி எடுப்படும், அஸ்தஃபருல்லா, அல்லா நம்மை பாதுகாக்க வேண்டும். உண்மையில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் தவறாக கூறினார்களா?
ஆனால் அது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கருத்து அதற்கு பிறகு அது உமர்(ரலி) ஆட்சிகாலத்தில் தடை செய்யப்பட்டது, என ஜாபிர் பின் அப்துல்லா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்களிடம்ஒருவர் வந்து,இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களும்(தவைண முறைத் திருமணம், "தமத்துஉ' ஹஜ் ஆகிய) இரு "முத்ஆ'க்கள் விஷயத்தில்கருத்து வேறுபாடு கொண்டனர்''என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள்அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்)செய்தோம். பின்னர்  உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யக்கூடாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, நாங்கள் அவ்விரண்டையும் திரும்பச்செய்வதில்லை  என்று விடையளித்தார்கள் என அபூநள்ரா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் .(இமாம் முஸ்லிம்(ரஹ்)

இதில் நாங்கள் என்பது அக்காலத்தில் வாழ்ந்த அனைத்து சகபாக்களையும் அவர்கள் பின்பற்றி நடந்த தாபியின்களையும் குறிக்கும் என்பதை கவனிக்க வேண்டும், மேலும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் கருத்து வேறுபாடு பற்றி கூறப்படும் போது அதற்கு ஜாபர்(ரலி) அவர்கள், நாங்கள் அதை உமர்(ரலி) அவர்களின் காலத்தில் அவ்வாறு செய்வதில்லை என விடையளித்தார்கள், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டாலும் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் அதை நிறுத்திகொண்டார்கள் என தெளிவாக ஜாபர்(ரலி) அவர்களின் கருத்துகளின் மூலம் விளங்கி கொள்ளலாம்.


இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், தவணை முறை திருமணம் இஸ்லாத்தில் ஆரம்ப காலத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது..பிறகு(தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.) என்ற திருகுரான் வசனம் இறக்கப்பட்ட  போது இப்னு அப்பாஸ் அவர்கள் முத்ஆ வை தடை செய்தார்கள்(இமாம் திர்மதி(ரஹ்)).

இதில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அனுமதிப்பட்டிருந்தது என்று கூறும் போது இமாம் புகாரி(ரஹ்) இடம் பெற்றுள்ள ஹதிஸ் இப்னு அப்பாஸ்(ரலி) இஸ்லாத்தில் ஆரம்பத்தில் தான் அவ்வாறு கூறினார்கள் தவிர எல்லா காலத்திலும் என்று கூறவில்லை,அதன் பிறகு உமர்(ரலி) அவர்களின் ஆட்சியில், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கூற்று அவ்வாறு இல்லை என ஜாபர்(ரலி) அவர்கள் மற்றொரு வழியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது,

மேலும் அது சகபாக்கள்(ரலி) அவர்கள் மட்டும் பொருந்தும் வேற யாருக்கும் அது பொருந்தாது என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தவணை முறைத் திருமணம் (முத்ஆ), ஹஜ் காலத்தில் "தமத்துஉ' செய்வது ஆகிய இரு"முத்ஆ'க்களும் (நபித்தோழர்களாகிய) எங்கைளத் தவிர வேறவருக்கும் பொருந்தாது எனஅபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)


(எம் தந்தை) அலீ(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அலீ(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள் .(இமாம் புகாரி(ரஹ்))இமாம் முஸ்லிம்(ரஹ்)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்கள் பலகினமாகவும், தேவையில்லாமல் தவணை முறை திருமணத்தை செய்வதை பார்த்தார்கள், பிறகு தாம் அறிவித்த கருத்தை விலக்கி கொண்டார்கள்(இமாம் இப்னு ஜவ்ஸி(ரஹ்))

மேலும் மற்றொரு வழியில்
பொருப்பாளர்கள் இல்லாமல் எந்த திருமணம் கிடையாது என இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் இப்னு மஜா(ரஹ்),இமாம் முஹம்மது(ரஹ்))

அப்படி இருக்கும் போது முத்ஆ திருமணதிற்கு எவ்வாறு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அனுமதிதிருப்பார்கள்.

நிச்சியமாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் மாமேதைத்தான், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை குறை கூறினவர்கள் முட்டாள்கள்.

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

தமத்துவு ஹஜ் பற்றி அறியாமை

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தது பரவலாகத் தெரிந்த நிலையில் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. அது சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள்.
அனைவருக்கும் தெரிந்த நபிவழியை மிகச் சிறந்த நபித் தோழர்கள் தடை செய்திருப்பதைக் கண்ட பின்பும் நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படிச் சரியான கருத்தாக இருக்க முடியும்?

நமது பதில்:

தமத்துவு ஹஜ்:

இமாம் புகாரி(ரஹ்) ஹதிஸ் எண் 1569 விற்கு விமர்ச்சிபவர்களின் மொழியாக்கம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததைத் தடுப்பது தவிர உமது நோக்கம் வேறு இல்லை என்று உஸ்மான் (ரலி)யிடம் நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு இரண்டையும் சேர்த்துச் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.பார்க்க புகாரி : 1569

இமாம் புகாரி(ரஹ்) ஹதிஸ் எண் 1569 -விற்கு உண்மையான மொழியாக்கம்:

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்கள்.
அலீ(ரலி), உஸ்மான்(ரலி) இருவரும் உஸ்ஃபான் எனுமிடத்தில் தமத்துஉவின் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அலீ(ரலி) 'நபி(ஸல்) அவர்கள் செய்த செயலிலிருந்து எங்களை நீர் தடுக்க நாடுகிறீர்" என்று உஸ்மான்(ரலி) அவர்களிடம் கூறி, ஹஜ், உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள்

அடையாளம் காணுங்கள் சகபாக்கள்(ரலி) அவர்களைப் பற்றி எவ்வாறு இட்டு கட்டுகிறார்கள், இன்னும் நீங்கள் கண் இருந்தும் குருடர்களாக இருக்காதீர்கள், காது இருந்தும் செவிடர்களாக இருக்காதீர்கள், வாயிருந்து ஊமையாய் இருக்காதீர்கள்

மேலும்

உம்ராவுக்கும் மட்டும் இஹ்ராம் கட்டுவதும், ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டுவது, ஹஜ்ஜிற்காகவும் உம்ராவுக்காவும் இஹ்ராம் கட்டுவதும் இம்மூன்றும் நபி(ஸல்) அவர்கள் சகாபக்கள்(ரலி) அவர்களுக்கு கற்று கொடுத்தார்கள், நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜிற்கு வந்த சகபாக்களின் நிலைமையை வைத்து இவ்வாறு கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் உம்ராவுக்கவும் தல்பியா எவ்வாறு கூற வேண்டும் என்பதும் ஹஜ்ஜிற்காகவும் தல்பியா எவ்வாறு கூற வேண்டும் என்பதும், ஹஜ்ஜிற்காகவும் உம்ராவுக்கவும் தல்பியா எவ்வாறு கூற வேண்டும் என்பதும் கற்று கொடுத்துள்ளார்கள், இதனால் சகபாக்கள்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எவ்வாறு கற்று கொடுத்தார்களோ அது போன்றே அவர்கள் செயல்பட்டார்கள்,

அதன் விளக்கம்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (விடைபெறும் ஹஜ்ஜுக்காகப்)புறப்பட்டோம். அப்போது அவர்கள், "உங்களில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்)"இஹ்ராம்' கட்டவிரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! ஹஜ்ஜுக்கு மட்டும் (தமத்துஉ)"இஹ்ராம்' கட்ட விரும்புகின்றவர், அதற்காக "இஹ்ராம்' கட்டட்டும்! உம்ராவிற்கு மட்டும்(இஃப்ராத்) "இஹ்ராம்' கட்டவிரும்புகின்றவர், அதற்காக "இஹ்ராம்' கட்டட்டும்!'' என்றுசொன்னார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்' கட்டி, "தல்பியா'கூறினார்கள். அவ்வாறே அவர்களுடன் மக்களில் சிலரும் "இஹ்ராம்' கட்டினர். வேறுசிலர் உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டிற்கும் "இஹ்ராம்' கட்டினர். இன்னும் சிலர் உம்ராவிற்குமட்டும் "இஹ்ராம்' கட்டினர்.நான் உம்ராவிற்காக மட்டும் "இஹ்ராம்' கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

உமர்(ரலி) அவர்கள் தமத்துஉ ஹஜ்ஜை தடை ஏற்படுத்த காரணம் என்ன?

முத்தலாக விசயத்தில் எவ்வாறு மக்கள் விளையாடி கொண்டி இருந்தார்களோ, அதே போல் தான் தம்மத்துஉ ஹஜ் விசயத்திலும் விளையாடினார்கள், இதனை அறிந்த உமர்(ரலி) அவர்கள் தமத்துஉ ஹஜ்ஜை தடை செய்தார்கள்.

உமர்(ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ் பருவத்தில்உம்ராச் செய்துள்ளனர் என நான் அறிந்துள்ளேன். ஆயினும்,ஹாஜிகள் தம் துணைவியருடன்(அரஃபாவில் உள்ள) "அராக்' பகுதியில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு(குளித்து)விட்டு,தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க (அரஃபா நோக்கிச்)செல்வதை நான் வெறுத்தேன்(ஆகவேதான், ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்ய வேண்டாம் என நான் ஆணையிட்டேன்)'' என்றார்கள் என அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்)

உமர்(ரலி) அவர்களின் தீர்ப்பை சகபாக்கள்(ரலி) அவர்கள் பின்பற்றுவோம் என கூறுவதும், தமத்துஉ ஹஜ்ஜை கைவிடுவதும்:

(ஹஜ்ஜுக்காகச் செய்ய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான்மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கிவந்தேன். உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒரு மனிதர், "அபூமூசா!' அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!' உங்களது ஒரு தீர்ப்பை நிறுத்திவையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்(கலீஃபா) ஹஜ்ஜின் கிரியைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறினார். அதன் பின்னர் நான், "மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செய்யல்படுத்திவிடாமல்) அவர் எதிர்பார்த்திருக்கட்டும்.
ஏனெனில்,இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்''என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "நாம்
அல்லாஹ்வின் வேதப்படி செய்யலாற்றுவெதனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டைளயிடுகிறது.நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை)இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை''என்று கூறினார்கள்.என அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்)

அபூமூசா அல்அஷ்அரீ(ரலி) தமத்துஉ செய்யலாம் தீர்ப்பு வழங்கி கொண்டிருக்கும் போது, உமர்(ரலி) அவர்கள் சட்டத்தை அறிந்த அபூமூசா அல்அஷ்அரீ(ரலி) தனது கருத்தை தடைசெய்தார்கள், பிறகு உமர்(ரலி) அவர்களை பின்பற்றுங்கள் என்று சொன்னார்கள்

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்களிடம்ஒருவர் வந்து, "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களும்(தவைண முறைத் திருமணம், "தமத்துஉ' ஹஜ் ஆகிய) இரு "முத்ஆ'க்கள் விஷயத்தில்கருத்து வேறுபாடு கொண்டனர்'' என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள்அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்)செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யக்கூடாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனேவ, நாங்கள் அவ்விரண்டையும் திரும்பச்செய்வதில்லை'' என்று விடையளித்தார்கள் என அபூநள்ரா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் .(இமாம் முஸ்லிம்(ரஹ்)
மற்றொரு வழியில் இச்சட்டம் நபித்தோழர்களுக்கு(ரலி) அவர்களுக்கு மட்டும் பொருந்தும்:

தவணை முறைத் திருமணம் (முத்ஆ), ஹஜ் காலத்தில் "தமத்துஉ' செய்வது ஆகிய இரு"முத்ஆ'க்களும் (நபித்தோழர்களாகிய) எங்கைளத் தவிர வேறவருக்கும் பொருந்தாது என அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

கருத்து வேறுபாடுகளுக்கு முடிவு:

உமர்(ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் இரு முத் ஆக்களும் கருத்து வேறுபாடு களைந்தது, அதாவது சிலர் உஸ்மான்(ரலி), உமர்(ரலி) அவர்களின் தமத்துஉ ஹஜ் கருத்துக்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள் மற்றும் முத்ஆ எனப்படும் தவணை முறை திருமணத்திற்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டார்கள், ஆனால் ஜாபர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், அந்த கருத்து வேறுபாடு உமர்(ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் நாங்கள் திரும்ப செய்யவில்லை என விடையளித்தார்கள்,

இதில் நாங்கள் என்பது ஒட்டு மொத்த சகாபாக்களையும் அவர்களை பார்த்த தாபின்களையும் குறிக்கும்

உமர்(ரலி) அவர்கள் தமத்துஉ மற்றும் முத்ஆ இரண்டையும் சுயமாக தடை செய்தார்களா?

இல்லை, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை தான் பின்பற்றினார்கள்

(1) தமத்துஉ

ஹஜ்ரத் மூஆவியா இப்னு அபூசூப்யான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவையும்(தமத்துஉ) சேர்த்து செய்வதை தடை செய்தார்கள்(இமாம் அபூதாவுத்(ரஹ்)

(2) முத்ஆ

கைபர் போர் தினத்தன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தவணைமுறைத்திருமணத்திற்கும் ("முத்ஆ'),நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும் தடை விதித்தார்கள் என அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (இமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் இப்னு மஜா(ரஹ்)

மேலும் உமர்(ரலி) அவர்களின் சுன்னத்தை பின்பற்றுவதும் நம் மீது கடமையாகும், அல்லா உண்மையை உமர்(ரலி) அவர்களின் நாவிலும், இதயத்திலும் வைத்து உள்ளான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், அவர்கள் எது பேசினாலும் அது உண்மையும், சத்தியமாகும் என அல்லாவே வாக்களித்து உள்ளான். அல்லாவின் வார்த்தையை குறை சொல்பருக்கு எவருக்கு அதிகாரம் உண்டு,

மேலும் உஸ்மான்(ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களுடன் கருத்து வேறுபாட்டிற்கான காரணம் அவர்கள் உமர்(ரலி) கருத்தையே கொண்டு இருந்தார்கள்  என்பதை பல இமாம்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். அதனால் தான் உமர்(ரலி) அவர்களின் கருத்தை முதலில் விளங்கி கொள்வதற்காக பதித்தேன்

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

உடலுறவு கொண்டு, இந்திரியம் வெளியாகா விட்டாலும் குளிப்பு கடமை என்று ரசூல் (ஸல்) கட்டளையிட்டிருக்க, உஸ்மான் (ரலி) அவர்கள் குளிப்பு கடமையில்லை என்று கூறியிருக்கிறார்கள். (புஹாரி 179 )

இப்படியெல்லாம் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்

நமது பதில்:

ஹதிஸை ஆராய்மல் பொய்யை பேசும் விமர்ச்சிபவர்கள், சகபாக்கள்(ரலி) அவர்கள் மீது இட்டுகட்டுபவற்றை நிறுத்தி கொள்.

ஆரம்ப சட்டம்:

விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்ட சலுகையாக இருந்தது. பின்னர் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு(ஆணுறுப்பும்,பெண்ணுறுப்பும் இணைந்து விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது அவசிக்கப்பட்டு) விட்டது. என உபை பின் கஅபு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உஸ்மான்(ரலி, அலி(ரலி), ஆரம்ப காலத்தில் சலுகை அளிக்கப்பட்ட ஹதிஸ், அதுவும் அவர்கள் சுயமாக அறிவிக்கவில்லை,

உஸ்மான்(ரலி), அலி(ரலி), ஆகியோர் அறிவிக்கிறார்கள், விந்து வெளிப்பட்டாலே குளிப்பது அவசியம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹதிஸ் சட்டம் மாற்றப்பட்டப்பின் உஸ்மான்(ரலி), அலி(ரலி), அறிவிக்கும் ஹதிஸ்:

பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இது ஹசன், ஸஹிஹ் எனும் தரத்தலைமைந்தாகும், ஆயிசா(ரலி) அவர்கள் பல்வேறு வழிகளில் இந்த ஹதிஸ் அறிவிக்கப்படுகிறது.(அவர்கள்) அபூபக்கர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி),அலி(ரலி), போன்ற நபித்தோழர்களில் பலரது கருத்தும், தாபியின்களில் உள்ள சட்ட நிபுனர்களின் கருத்தும் ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),ஷாஃபி(ரஹ்),அஹ்மத்(ரஹ்),இஸ்ஹாக்(ரஹ்) போன்றவர்களின் கருத்து இதுவேயாகும், பெண்ணுறுப்பை, ஆணுறுப்பு கடந்துவிட்டால்(விந்து வெளிப்பட்டா விட்டாலும்) குளிப்பு கடமை என்று இவர்கள் கூறுகின்றார்கள்.
(இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் நஸயி(ரஹ்),இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்))

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

குளிப்பு கடைமையான நிலையில் நோன்பைத் துவக்குவது

பிறரது இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டல்

பிளேக் ஏற்பட்ட ஊருக்குள் நுழைவது

விரலை வெட்டியதற்கான நட்டஈடு

நமது பதில்:

மேற் கொண்ட தலைப்புகள் பதித்துவிட்டு பிறகு விமர்ச்சிபவர்களே கூறியுள்ளார், ஹதிஸை முதலில் சகபாக்கள்(ரலி) தெரியமல் இருந்தது பிறகு எடுத்து காட்டிவுடன் அவர்கள் அதை ஏற்று கொண்டார்கள்,

நாம் முதலில் இதற்கு விளக்கம் அளித்து உள்ளோம், எல்லா சகப்பாக்களும் எல்லா நேரமும் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கவில்லை சில சகபாக்களைத் தவிர.

ஆனால் சகபாக்கள்(ரலி) அவர்கள் ஒரு செய்தி தெரியாமல் இருந்த பிறகு நபி(ஸல்) அவர்களை வார்த்தை கேட்ட பிறகு தன்னை மாற்றி கொண்டார்கள், ஆனால் விமர்ச்சிபவர்கள் மட்டும் எத்தனை ஆதாரம் காட்டினாலும் நான் புடித்த முயலுக்கு மூன்று கால் என்றும், நான் பார்த்த பாம்புக்கு கால் இருந்தது என்ற அர்த்தத்தில் செயல் படுகிறார், அவர் அப்படி சொன்னாலும் சரித் தான் இருக்கும் என நம்பும் அவர்களின் கூட்டமும் உள்ளது என்பதை வேதனை அளிக்கக் கூடியதாய் உள்ளது.

மறுப்பவர்கள் வைக்கும் விமர்சனம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.
நூல் : புகாரி 1128, 1177

நீங்கள் லுஹா தொழுவதுண்டா? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்க வில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 1175

நமது பதில்:

நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை. ஆனால் நான் தொழுவேன் என ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (இமாம் புகாரி(ரஹ்)

ஒரு போது லுஹா தொழவில்லை என்று சொன்ன ஆயிசா(ரலி) அவர்கள் மற்றொரு வழியில் நான் நபி(ஸல்) லுஹா தொழுதததை நான் பார்த்ததில்லை  என்று சொல்லியுள்ளார்கள், இரண்டையும் இணைத்து தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் தவிர, எடுத்தோம் கவிழ்தோம் என்று கூற கூடாது. இதே போன்று தான் இப்னு உமர்(ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்,

முவர்ரிக் அறிவித்தார். நீங்கள் லுஹாத் தொழுவது உண்டா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல்லை' என்றார்கள். உமர் தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லை' என்றார்கள். அபூ பக்ர்(ரலி தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கும் 'இல்லை' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுவார்களா? என்று கேட்டேன்.அது தெரியவில்லை  என்றார்கள்.(இமாம் புகாரி(ரஹ்))

இப்னு உமர்(ரலி) அவர்களும், ஆயிசா(ரலி) அவர்களும்,நபி(ஸல்) லுஹா தொழுததை எனக்கு தெரியவில்லை என்று கூறினார்களே தவிர, லுஹா தொழுகையை தொழுக கூடாது என்று சொல்லவில்லை,

ஆனால் விமர்ச்சிபவர்கள் அடியோடு மறுத்தார்கள் என கட்டுகதையை சகபாக்கள்(ரலி) அவர்கள் மீது இட்டு கட்டுகின்றனர்.

மறுப்பவர்கள் வைக்கும் விமர்சனம்:

தயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்(ரலி)

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.
சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப் பான்மை தலை சிறந்த நபித் தோழரிடம் காணப் பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? நபித் தோழர்களின் நடவடிக்கைகளும் மார்க்க ஆதாரங் கள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாகும்?

கடமையான குளிப்புக்காகவும் தயம்மும் செய்யலாம் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அந்தச் சட்டம் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. அம்மார்(ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதையும் உமர் (ரலி) அவர்கள் நம்பவில்லை என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து தெரிகிறது.
மிகச் சிறந்த நபித் தோழருக்கே இது பற்றிய சட்டம் தெரியவில்லை எனும் போது நபித் தோழரின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும்?

நமது பதில்:

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்கள்,. அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக்(ரஹ்) அறிவித்தார்கள்.(இமாம் புஹாரி(ரஹ்)

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்தார். “எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “(தண்ணீர் கிடைக்கா விட்டால்) நீ தொழக் கூடாது என்று விடையளித்தார்கள். அப்போது அம்மார் (ரலி) அவர்கள் “முஃமின்களின் தலைவரே! நானும், நீங்களும் ஒரு சிறு படையில் சென்றோம். நம் இருவருக்கும் குளிப்பு கடமை யானது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது நீங்கள் தொழவில்லை. நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் கூறிய போது, “உமது இரு கைகளால் தரையில் அடித்து வாயால் ஊதிவிட்டு கைகளால் முகத்திலும் முன் கைகளிலும் தடவிக் கொள்வது உமக்குப் போதுமே! என்று கூறினார்கள். இது உங்களுக்கு நினை வில்லையா? என்று உமர் (ரலி) அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். அப்போது உமர் ரலி) அவர்கள் “அம்மாரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று கூறினார்கள். “உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் இது பற்றி நான் அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்)

இங்கு இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும், உமர்(ரலி) அவர்களும் அல்லாவின் வசனத்தை மறுக்க வில்லை,

இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களின் ஹதிஸ் தொடர்ச்சி இமாம் அபூதாவுத்(ரஹ்) கித்தாபில் இடம் பெற்றுள்ளது

அதற்கு உமர்(ரலி) அவ்வாறன்று  அல்லாவின் மீது ஆணையாக இது விசயத்தில் நீர் எதை நோக்கி திருப்பி விட்டீரோ, அதை நோக்கியோ திருப்பி விடுகிறோம்(இது உன் விருப்பத்தை சார்ந்தது)என்று சொன்னார்கள்.

இங்கு உமர்(ரலி) அவர்கள் அல்லாவின் வசனத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.உம் விருப்பத்தை சார்ந்தது  என்று கூறியுள்ளார்கள்.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அளித்த பதில்:

இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்கள்.

அவர்கள் இந்த கருத்தை கொண்டுதான் பதிலளித்தார்கள், மேலும்  அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!'என்று விடையளித்தார்கள்.

தண்ணீர் கொஞ்சம் குளிராக இருந்தும் மக்கள் அலட்சியமாக தயம்மும் செய்வபவர்களைப் தான் கூறினார்கள் என்ற நோக்கத்தில் கூறினார்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இது பேணுதல் அடிப்படையில் கூறப்பட்டதாகும் தவிர, ஏனென்றால்
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?என்று கேட்டார்கள். மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதேர! என்று கூறினர்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவை:)சிரமமான சூழ்நிலைகளிலும் உளுவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்என்று கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

சிரமமான முறையில் உளுவை முழுமை செய்வதும் கட்டுபாடுகளாகும்  என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,
எனவே தான் தண்ணீர் குளிராக இருந்தால் அலட்சியம் செய்யாமல் இருக்க கூடாது என்பதை கண்டித்து தான் சகபாக்கள்(ரலி) அவ்வாறு கூறினார்கள் தவிர அல்லாவின் வசனத்தை மறுக்கவில்லை என்பதை விளங்கி கொள்ள முடியும்.

மறுப்பவர்கள் வைக்கும் விமர்சனம்:

இரண்டு அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்வூத்(ரலி)

திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளதை உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.ஆனால் மிகச் சிறந்த நபித் தோழரான இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களை மறுத்து வந்தார்கள். தமது ஏட்டில் இவ்விரு அத்தியாயங்களையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் இரண்டு பிரார்த்தனைகள் தான். குர்ஆனின் அத்தியாயங்கள் அல்ல என்று கடைசி வரை சாதித்து வந்தார்கள்.
நூல் : முனத் அஹ்மத் 20244, 20246
நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் ஆகும் என்றால் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் 112 தான் என்று நாமும் கூறலாமா? திருக்குர்ஆனின் விஷயத்திலேயே நபித் தோழருக்கு பிழை ஏற்பட்டது என்றால் நபித் தோழரின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?

நமது பதில்:

இமாம் நவவி(ரஹ்),இமாம் தஹபி(ரஹ்), இமாம் இப்னு ஹஜ்ம்(ரஹ்), இமாம் அல் ரஜி(ரஹ்),இமாம் பஜ்ஜார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து 'முஅவ்வஃதத்தைனி' மறுத்தாக எடுத்து காட்டப்படும் அனைத்து செய்தியும் பொய்யானது,நிராகரிக்கப்படவேண்டியது

குறிப்பு:

முஅவ்வஃதத்தைனி' என்பது திருகுர்ஆனின் கடைசி இரண்டு ஆயத்துகள்(113,114) ஆகும்,

'முஅவ்வஃதத்தைனி' இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் மறுத்தார்களா?

இல்லை, இதோ நபி(ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலிருந்து இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள்.

திரு குர்ஆனில் இரண்டு ஆயத்துகளை அதிகப்படியாக ஓதிவாறே அதன் பிறகு அவருக்கு அதன் மூலமாக அல்லா உயர்ந்த அந்தஸ்களை வழங்குவான் அந்த இரு ஆயத்து 'முஅவ்வஃதத்தைனி'(113 மற்றும் 114)ஆகும் என இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் கன்ஜுல் உம்மல்(ரஹ்))

திரு குர்ஆனில் இரண்டு ஆயத்துகள் 'முஅவ்வஃதத்தைனி'(113 மற்றும் 114)'தவிர்த்து வேற எதையும் சூனியத்தின் நிவாரணத்திற்கு (தாக்கத்திற்கு) பயன்படுத்துவதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள் என அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (இமாம் அபூதாவுத்(ரஹ்).

தெள்ள தெளிவாக இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் முஅவ்வஃதத்தைனி என்ற சொல்லை பயன்படுத்தி கூறுகிறார்கள், பிரார்த்தனை எனறால் முஅவ்வஃதத்தைனி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வந்திருக்க வேண்டும்,

இவ்வாறு அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றி இவ்வாறு வதந்தி பரப்புவர்கள் ராபிழாக்களும், கிருஸ்தவர்களும், யூதர்களும், இஸ்லாத்திறகு எதிரான அமைப்பு தான், ஆனால் தற்போது அது போல் கூறுவது(………..).அவர் எது சொன்னாலும் சரி என்ன நம்பும் அவரது கூட்டங்கள் இடம் பெற்றிருப்பது வேதனை தரும் செய்தியாகும்.

இதைப் பற்றி அல்லா கூறுகிறான்

மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால்அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து
(தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.(அல்குர்ஆன் 4:83)

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுதல்:
ஹஜ், உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் நறுமணம் பூசி, அந்த நறுமணம் நீங்குவதற்கு முன் இஹ்ராம் அணியலாமா?
இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள். இவ்வாறு முடிவு செய்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசக் கூடாது என்பதால் முன்னர் பூசிய நறுமணமும் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் கருதியதே இதற்குக் காரணம்.
இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப் பட்ட போது “இப்னு உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன். பின்னர் தமது மனைவியரிடம் செல்வார்கள். பின்னர் அவர்கள் மீது நறுமணம் வீசும் நிலையில் காலையில் இஹ்ராம் அணிவார்கள் என்று விடையளித்தார்கள்.
பார்க்க : புகாரி 267, 270, 1754
நேரடி ஆதாரங்கள் இல்லாத போது நபித் தோழர்கள் சுயமாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று எப்படிக் கூற முடியும்?//

நமது பதில்:

இப்னு உமர்(ரலி) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்னால் நறுமணம் பூசுவதை தடுத்தார்களா?

("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.(இமாம் புஹாரி(ரஹ்)

இதில் எங்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் வாசனை திரவம் கூடாது என்று கூறியுள்ளார்கள், எனக்கு விரும்பம் இல்லைஎன்று தான் கூறினார்கள் தவிர, வாசனை திரவம் கூடாது என்று எங்கு தடைசெய்தார்கள், தீர்ப்பு வழங்கினார்கள்?.

ஆயிசா(ரலி) அவர்கள் நறுமணம் பூசும் போது நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?

இல்லை

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்'கட்டியபோது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,''மிக நல்ல வாசனை பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)'' என்று விடையளித்தார்கள்.என உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம்முஸ்லிம்(ரஹ்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்' கட்டியேபாது அவர்கள் "இஹ்ராம்'கட்டியதற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோது அவர்கள் "தவாஃபுல் இஃபாளா' செய்வதற்கு முன்பும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்கு நான் பூசிவிட்டேன் என ஆயிசா(ரலி) அவர்கள் கூறினார்கள்(இமாம்முஸ்லிம்(ரஹ்)

ஆயிசா(ரலி) ஆடையில் வாசனை திரவத்தை பூசினார்களா?

இல்லை,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தல்பியா' கூறியேபாது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.என ஆயிசா(ரலி) அவர்கள் கூறினார்கள்(இமாம்முஸ்லிம்(ரஹ், இமாம் நஸயி(ரஹ்),இமாம் அபூதாவுத்(ரஹ்)). இதில் இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்களின் கித்தாப்பில் இந்த ஹதிஸை தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை என்று இடம் பெற்றுள்ளது

தலையிலும், தாடியிலும் வாசனத் திரவத்தை பூச அனுமதி உள்ளது, ஆனால் வண்ணங்கள்(கலர்) இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை. இஹ்ராம் கட்டிருக்கும் போது ஆடையில் பூச அனுமதி இல்லை


ஆயிசா(ரலி) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த போது வாசனை திரவம் பூசினார்களா?

இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம்' கட்டுவதற்கு முன் என்னால் இயன்ற மிக நல்ல வாசைனப் பொருளை அவர்களுக்குப் பூசிவந்தேன். பின்னர் அவர்கள் "இஹ்ராம்'கட்டுவார்கள் என ஆயிசா(ரலி) அவர்கள் கூறினார்கள்(இமாம்முஸ்லிம்(ரஹ்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்' கட்டிய போது, அவர்களது தலைவகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பைதப் போன்றுள்ளது என ஆயிசா(ரலி) அவர்கள் கூறினார்கள் என ஆயிசா(ரலி) அவர்கள் கூறினார்கள்(இமாம்முஸ்லிம்(ரஹ், இமாம் நஸயி(ரஹ்)

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

இன்றைக்கு பெண்களின் நடவடிக்கைளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டால் இஸ்ரவேல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் (பள்ளிவாசலுக்கு வருவதை விட்டு) தடுக்கப்பட்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். நூல் : புகாரி 869
இந்த மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுயமாக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக ஏக இறைவனிட மிருந்து வந்த மார்க்கமாகும். நாளை என்ன நடக்கும் எதிர் காலத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதை யெல்லாம் நன்கறிந்த இறைவனால் இம்மார்க்கம் நமக்குத் தரப்பட்டுள்ளது.
ஆயிஷா (ரலி) கூறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதும் இறைவனுக்கு நன்கு தெரியும்//

நமது பதில்:

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(அல்குர்ஆன் 33:33)

மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 33:34)

நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 33:54)

(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்(அல்குர்ஆன் 33:55)

அல்லா பெண்களை போரில் கலக்க சொல்லியுள்ளனா?

அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) “தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்  என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.(அல்குர்ஆன் 9:46)

பெண்களே அல்லா சொல்வதை சிந்தியுங்கள்,

ஒரு பெண் மற்ற அந்நிய ஆண்களின் முகத்தை பார்க்க வந்துள்ள தடை:

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன்,உம்முஸல்மா(ரலி),மைமூனா(ரலி) ஆகியோரிடம் அமர்ந்து இருக்கும் போது, கண் பார்வையற்ற அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம்(ரலி)அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்தார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் உம்முஸல்மா(ரலி) மற்றும் மைமூனா(ரலி) அவர்களிடம் (உம்மு முக்தூமை)சுட்டிகாட்டி திரைக்கு பின்னால் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். உம்மு ஸல்மா(ரலி) கூறுகிறார்கள்: ‘நான், நாயகமவர்களிடம்(ஸல்), “யா ரஸூலுல்லாஹ், இவர் குருடரல்லவா? இவர் எப்படிக் எங்களை காண முடியும்?” என்று கேட்டேன். அதற்கு நாயகமவர்கள்(ஸல்), “நீங்கள் இருவரும் குருடர் இல்லையே, நீங்கள் இருவரும் இவரைப் பார்க்கிறீர்கள் என்றார்கள். என உம்முஸல்மா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் திர்மதி(ரஹ்), இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் அபூதாவுத்(ரஹ்),)

இன்று ஆர்ப்பாட்டம் என்ற பேரில் எத்தனைப் பெண்கள் அந்நிய ஆண்களுடன் சேர்ந்து இருக்கிறீர்கள், இது தான் நபி(ஸல்) அவர்களின் காட்டிய வழியா? பெண்களே சிந்தியுங்கள், ஒரு குருடர் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் இல்லத்திற்கு வந்த போது நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு பெண்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஆர்ப்பாட்டம் என்ற பேரில் செல்வது எந்த வகையில் நியாயம். சிந்திபவர்களுக்கு விடை கிடைக்கும், நான் ஹதிஸை பின்பற்றுகின்றோம் என்று வாய் அளவில் சொன்னால் போதாது, அது உள்ளத்தில் உதிக்க வேண்டும்.

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

(1) நபி(ஸல்) அவர்களுக்கு 'வஹீ' (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டது (திருகுர்ஆன் வசனம் 33:33):

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்!
அல்குர்ஆன் (33 : 33)

சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெüயே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம்
சொன்னார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு "வஹீ' (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) (இமாம் புஹாரி(ரஹ்))

நமது பதில்:

சகோதரர்களே நன்கு கவனிக்க வேண்டியவை இது நபி(ஸல்) அவர்கள் பர்தா சட்டம்( திருகுர்ஆன் 33:53) அனுமதியளித்தார்களே தவிர திருகுர்ஆன் வசனம் 33:33 அல்ல,

பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ('வலீமா'விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அல்லாஹ்' இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்துவிட்டார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்)

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

(2) நபி(ஸல்) அவர்களுக்கு 'வஹீ' (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டது (திருகுர்ஆன் வசனம் 33:33):

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்!
அல்குர்ஆன் (33 : 33)

//சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெüயே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு "வஹீ' (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு
அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (4795)//

நமது பதில்:

திருகுர்ஆன் 33:53) அனுமதியளித்தார்களே தவிர திருகுர்ஆன் வசனம் 33:33 அல்ல

மறுப்பவர்கள் வைக்கும் ஹதிஸ் பாதியே பதிவு செய்யப்பட்டுள்ளது, மறுபகுதி படித்தால் பொய்யர்களின் முகத்தை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால்,( நபி(ஸல்) அவர்கள் பர்தா சட்டம்( திருகுர்ஆன் 33:53) அனுமதியளித்தார்களே தவிர திருகுர்ஆன் வசனம் 33:33 அல்ல) தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப்(ரலி) பார்த்துவிட்டு 'சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!' என்று கூறினார்கள். சவ்தா(ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா(ரலி) வீட்டினுள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர்(ரலி) என்னிடம் இவ்வாறெல்லாம் கூறினார்கள்' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு 'வஹீ' (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

//பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில்
காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் "எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும்
இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி (324) //

நமது பதில்:

மேலுள்ளவை ஹதிஸின் ஒரு பகுதி, ஆனால் ஹதிஸின் மறுபகுதி எங்கே? ஹதிஸின் முன்பகுதி எங்கே மற்றும் பின் பகுதியும் எங்கே?, இப்படித் தான் ஆதாரம் காட்டி அப்பாவி பெண்களை ஏமாற்றுவதா? இப்பொழுதே தெரிகிறது நீ ஒரு மகப் பொய்யன் என்று.

இதோ!

நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.
'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?' என நான் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார்.
உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?' என நான் கேட்டதற்கு 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்' எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்' என்பதையும் சேர்த்தே கூறுவார்.
'கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, 'மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?' என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்" என ஹஃப்ஸா அறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்)

முதலாவது மறைக்கப்பட்ட உண்மை:

நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம்,

இராண்டவது மறைக்கப்பட்ட உண்மை:

பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள், ஆனால் இன்று நடுத் கடை தெருவில் தன் அழகை அந்நிய ஆண்களுடன் சேர்ந்த் நிற்பது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செயல்படுகிறீர்கள்.

மூன்றவதாக மறைக்கப்பட்ட உண்மை:

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் மட்டும் அனுமதி அளித்ததை பொதுவான பிரச்சாரம் என்று தன் சுய கருத்தததை திணித்தது.

நான்கவதாக மறைக்கப்பட்ட உண்மை:

'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம்,

நான் ஒன்று கேட்கின்றேன், நீங்கள் எந்த போர் சென்றீர்கள் எந்தனைப் பேருக்கு கை, கால், மண்டை உடைந்தது, எத்தனை பேர்கள் இறந்து போனீர்கள், என்று விவரம் சொன்னால் நன்றாக இருக்கும்

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

//மேலும் பெண்கள் பள்ளிக்கு எதற்காக வரவேண்டும் என்றால் மார்க்க விசயத்தை கற்று கொடுப்பதற்காக அழைக்கின்றோம், //

நமது பதில்:

மார்க்க பிரச்சாரம் எவ்வாறு பெண்களுக்கு எவ்வாறு நபி(ஸல்) நிகழ்த்தினார்கள்:

மேலும் பெண்கள் பள்ளிக்கு எதற்காக வரவேண்டும் என்றால் மார்க்க விசயத்தை கற்று கொடுப்பதற்காக அழைக்கின்றோம்,

சரி விசயத்திற்கு வருவோம்

நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு பெண்களுக்கு மார்க்கவிளக்கத்தை போதித்தார்கள்:

நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள் கூறினார்கள் ஆண்களது கூட்டம் எப்பொழுதும் உங்களைச் சுற்றி இருப்பதால், உங்களை நெருங்க எங்களால் இயலாது போய் விடகின்றது, எனவே எங்களுக்கென ஒரு ஒதுக்குங்கள், அன்றைய தினத்தில் நாங்கள் உங்களிடம் வந்து (மார்க்க விஷயங்களைப்) பெற்றுக் கொள்ள முடியும். எனவே, இதன் பொறுட்டு நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி அந்த நாளில் பெண்களைச் சந்திக்க ஆரம்பித்தார்கள், அவர்களுக்கு மார்க்கப் போதனைகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள் என அபூஸயீத்அல்குத்ரீ(ரலி) அறிவிக்கிறார்கள்(இமாம் புஹாரி(ரஹ்)

இன்ன இன்ன நபரின் வீட்டில் உங்களை (மார்க்க விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக) நியமனம் செய்திருக்கின்றேன்', (அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நபர்) அவர்களிடம் வந்தார், இன்னும் அவர்களிடம் (மார்க்க விஷயங்கள் பற்றிப்) பேசினார்.என ஸஹ்ல் இப்னு அபீ ஸாலிஹ் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் மூலமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்(இப்னு ஹஜர்(ரஹ்),

இதில் கவனிக்க வேண்டியவை பெண்கள் கூறுகிறார்கள், நபி(ஸல்) அவர்களிடம் ஆண்கள் கூட்டம் எப்பொழுது உங்களைச் சுற்றி இருப்பதினால் நாங்கள் உங்களை நெருங்க முடியவில்லை,

ஆனால் இன்று நடுத்தெருவில் பெண்களை இழுத்து வந்து மார்க்கத்தை கற்று தருகிறோம், நடுத்தெருவில் ஆர்ப்பட்டாதிற்கு அழைப்பது எப்படி பொருந்தும், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் எவ்வாறு இருந்தார்கள் என்று நீங்கள் சிந்திக்க வேண்டாமா?, ஆண்கள் அருகில் கூட பெண்கள் நெருங்க வெட்கப்பட்டார்கள். ஆனால் இன்று ஆண்கள் அருகில் பெண்கள் இருப்பதை பெருமையாக நினைக்கின்றீர்களா?

அதனால் தான் ஆயிசா(ரலி) அவர்கள் பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள்.
இதனை அறிவித்த உம்ராவிடம் 'பனு இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டிருந்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'ஆம்' என்றார் என்று யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்கள்.(இமாம் புஹாரி(ரஹ்).

பெண்களே நபி(ஸல்) அவர்கள் குணங்கள் உங்களிடமிருக்கிறதா என்பதை சோதித்து பாருங்கள்?

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்னை விடவும்அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஏதேனுமொன்றை வெறுத்தால், அந்த வெறுப்பை அவர்களது முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துவிடுவோம் என அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

திரைக்குள் இருக்கும் பெண்களை விட நபி(ஸல்) வெட்கமுடையவர்களாக இருந்தார்கள், ஆனால் நீங்கள் நடுத்தெருவில் வந்து ஆர்ப்பாட்டத்தில் அந்நிய ஆண்கள் முன்பு நிற்கீறீர்கள்,

மேலும் இதில் ஒரு படிப்பினையையும் நமக்கு கிடைகிறது,

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் திரைக்குள் இருந்தார்கள் என்பதை அபூஸயித்(ரலி) அவர்கள் தெளிவாக கூறு இருக்கிறார்கள், மற்றொரு அறிவிப்பில் உங்கள் தேவைக்காக வெளியே செல்லுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

ஆனால் இன்று மார்க்க கல்வியை தவிர்த்து உலக ஆடம்பரத்திற்காவும் பெருமைக்காகவும் தமது சில பெண் பிள்ளைகளை ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்க கூடிய கல்லூரிகளிலும் மற்றும் பள்ளிகளிலும் படிப்பதால் காதல் எனும் கலச்சாரத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள், மார்க்க கல்வியை தான் அவர்களுக்கு கற்று கொடுத்தால் நாளை அல்லா உங்களைப் பெறுமைபடுத்துவான், கண்ணியப் படுத்துவான், உலக வாழ்க்கை சிறந்ததா? அல்லது மறுமை வாழ்க்கை சிறந்ததா? என உரிமை எடுக்கும் உரிமை பெற்றோர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது

உலக வாழ்க்கை நிரந்தரமானது அல்ல, மறுமை வாழ்க்கையே நிரந்தரமானது,

ஒரு மனிதன் மரணித்துவிடும் போது அவனது அனைத்து செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. மூன்று காரியங்களைத் தவிர அவைகள்,அவன் செய்த நிலையான தர்மம்,அவனது கல்வியின் மூலம் பிறர் பயனடைந்தது,அவனது ஸாலிஹான குழந்தை அவனுக்காக கேட்கும் பிரார்த்தனை. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என அபூஹுரைரா(ரலி)அறிவிக்கிறார்கள்(இமாம்முஸ்லிம்(ரஹ்)).

நிச்சியமாக நாம் ஒரு நாள் மரணிக்க இருக்கின்றோம், நாம் இறந்த பிறகு ஸாலிஹான நமது பிள்ளைகளின் துஆ தான் நமது அந்தஸ்தை உயர்த்தும், ஆனால் நமது குழந்தையை நல்ல முறையில் வளர வேண்டுமென்றால் நிச்சியமாக மார்க்க அறிவு வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள், நாம் இறந்த பிறகும் நமது கப்ரின் வாழ்க்கைக்கு எப்படி தயார் செய்ய வேண்டும் எனபதை தீர்மானம் செய்யுங்கள்

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி சைத்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான்.

நம் பெண்களுக்கு மார்க்க அறிவு இல்லை என்றால் நிச்சியமாக சைத்தான் வழிகெடுத்துவிடுவான் என்பதை மறந்துவிடாதீர்கள், நம் பிள்ளைகளுக்கு மார்க்க அறிவு கொடுப்பது ஒவ்வொரு பெற்றோர் மீதும் கட்டாய கடமையாகும்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் சிறந்தது என அவர்களிடம் அறிவுரை கேட்டப் பிறகு தான் இறக்கும் வரையில் பள்ளிக்கு செல்லாத உம்மு ஹுமைத்(ரலி):

உம்மு ஹுமைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் உங்களுடன் (ஜமாஅத்தில்) சேர்ந்து தொழ விரும்புகிறேன் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ என்னுடன் சேர்ந்து தொழுவதை விரும்புகிறாய் என்பது எனக்குதெரியும். நீ உன் வீட்டில் தொழுவதை விட வீட்டின் உள் அறையில் தொழுவது உனக்குச் சிறந்ததாகும். நீ உன் சமுதாயத்தின் பள்ளிவாசலில் தொழுவதை விட உன் வீட்டில் தொழுவது சிறந்ததாகும். நீ என்னுடைய பள்ளியில் தொழுவதை விட உன் சமுதாயத்தாரின் பள்ளியில் நீ தொழுவது உனக்குச் சிறந்ததாகும்.அதன் பிறகு உம்மு ஹுமைத்(ரலி) அவர்கள் வெகுதொலைவில் வீட்டில் ஒரு பகுதியில் மிகவும் இருண்ட பகுதியில் தொழுவதற்காக இடத்தை அமைக்க உத்திரவிட்டார்கள், பிறகு அல்லாவை சந்திக்கும் (இறக்கும்) வரையில் அவர்கள் அந்த இடத்திலே தொழுதார்கள்(இமாம் அஹமது(ரஹ்), இமாம் இப்னு குஸைமா(ரஹ்), இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்))

நபி(ஸல்) அவர்களுக்கு தொழுவது தான் ஒரு மனிதனுக்கு கிடைக்க கூடிய பெரும் பாக்கியம், ஆனால் நபி(ஸல்) அவர்கள் என் பின்னால் நின்று தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் சிறந்தது என்று கூறும் போது எவ்வளவு பெரிய உண்மை மறைந்து கிடைக்கின்றது என்பதை சிந்தியுங்கள்,உண்மை விடைக்கிடைக்க அல்லா போதுமானவன்.

பெண்களுக்கு மிகவும் சிறந்த பள்ளி அவர்களின் விட்டின் உள் அறையில்(தொழுவது) தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக உம்முஸல்மா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் தப்ரானி(ரஹ்) இமாம் ஹைதமி(ரஹ்)

பெண்களுக்கு மிகவும் சிறந்த தொழுகை அவர்களின் விட்டின் உள் அறையில்தொழுவது தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக அபூயாலா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் அஹமது(ரஹ்))


மறுப்பவர் வைக்கும் ஆதாரம்:

உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் புஹாரி(ரஹ்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெண்கள் இரவில் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள்'' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர், "பெண்களை வெளியே செல்ல நாங்கள் விடமாட்டோம். (அவர்கள் வெளியே
செல்ல) இதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள்'' என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறேன். ஆனால், நீ "அவர்களை நாங்கள் விடமாட்டோம்' என்று கூறுகிறாயா?'' என்று கூறி, தம் புதல்வரைக் கண்டித்தார்கள் என முஜாஹித்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்))

நமது பதில்:

முதல் ஹதிஸிற்கு விளக்கம்:

உமர்(ரலி) அவர்கள் விரும்பவில்லை, ஆனால் தடுக்கவில்லை ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டவர்கள் அவர்கள், பள்ளிவாசலுக்குச் செல்வதைவிட்டும் உங்கள் மனைவிகளை நீங்கள் தடுக்காதீர்கள்.எனினும் வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும், என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் தம் மனைவி வீடுகள் தான் சிறந்தது என்று தெரியாமல் பள்ளிக்கு செல்கின்றார்களே, என அர்தத்தில் விரும்பாமல் இருந்திருக்கலாம்.

இராண்டவது ஹதிஸிற்கு விளக்கம்:

ஹதிஸின் ஒரு பகுதி மட்டும் ஆதாரம் காட்டின அவர்கள், நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் மேலும் அறிவித்த செய்தியை மறைத்து விட்டார்கள்.

பள்ளிவாசலுக்குச் செல்வதைவிட்டும் உங்கள் மனைவிகளை நீங்கள் தடுக்காதீர்கள்.எனினும் வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் அபூதாவுத்(ரஹ்)

வீட்டின் மையப்பகுதியில் தொழுவதைவிட வீட்டில் உள்ளே அறையில் தொழுவது சிறந்தது, வீட்டில் உள்ளே தொழுவதைவிட வீட்டின் ஒதுக்குபுறமாக (யாருடைய கண்ணில் படாதவறு)உள்ள அறையில் தொழுவது சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் அபூதாவுத்(ரஹ்)).


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் எவ்வாறு இருந்தார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுது முடித்ததும் பெண்கள் போர்வைகளால் போர்த்திக் கொண்டு (வீடுகளுக்குப்) புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.என ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் புஹாரி(ரஹ்).

ஆனால் இன்று பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள், நடுவீதியில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் தமது முகத்தையும், உடலையும் காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள், இதற்கு தான் ஆயிசா(ரலி) அவர்கள் கூறினார்கள்.பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) நபி(ஸல்) தடுத்திருப்பார்கள். எனக் ஆயிசா(ரலி) அவர்கள் கூறினார்கள்.

பெண்களுக்கு ஜும்ஆ கடமையில்லை:

யார் ஹதிஸைப் பின்பற்றுகிறார்கள் என்பதை சகோதரரே நீங்கள் சிந்தியுங்கள்

பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் அபூதாவுத்(ரஹ்)இமாம் நவவி(ரஹ்), இமாம் இப்னு ஹஜர்(ரஹ்), இமாம் ஜாமிஆ மின் அஜ் சுன்னா(ரஹ்).

பெண்கள் பள்ளிக்கு சென்றார்கள் என்று கூறுகிறார்களே நபி(ஸல்) அவர்கள் எப்பொழுது பெண்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று திருப்பி அவர்களிடம் கேளுங்கள்!!

பெண்கள் பள்ளிக்கு செல்ல எப்பொழுது அனுமதி:

பெண்கள் இரவில் பள்ளிக்குச் செல்வதற்கு நீங்கள் அனுமதியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். (இமாம் புஹாரி(ரஹ்) (இமாம் முஸ்லிம்(ரஹ்))
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் எனினும் அவர்களுக்கு வீடுதான் சிறந்தது.

பெண்களே! அல்லா எங்கு தொழுவதை பெண்களை விரும்புகின்றான்:

பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். அல்லாவுக்கு எப்பொழுது நெருக்கமாக இருக்கின்றால் என்றால் அவள் வீட்டில் தொழுகிற போது தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(இமாம் தப்ரானி(ரஹ்)

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்

விமர்ச்சிபவர்களின் மொழியாக்கம்;

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதையை ஹராமாக்கியதாகக் கூறுகிறார்களே? என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த செய்தியை பஸராவில் வைத்து ஹகம் பின் அம்ர் (ரலி) எங்களிடம் கூறினார்கள். ஆனால் கல்விக் கடல் இப்னு அப்பாஸ் (ரலி) இதை ஏற்க மறுத்து (6:145) வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) விடையளித்தார்கள். அறிவிப்பவர் : அம்ர்,
நூல் : புகாரி 5529

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த அறிவிப்பைக் கேட்ட பிறகும் குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி இப்னு அப்பாஸ் (ரலி) மறுத்ததும், ஜாபிர் (ரலி) அதை வழி மொழிந்ததும் ஏற்புடையதல்ல.

நமது பதில்:

உண்மையான மொழியாக்கம்:

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள்
நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களிடம் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஹகம் இப்னு அம்ர் அல்கிஃபாரீ(ரலி) பஸராவில் வைத்து எம்மிடம் இதைச் சொல்லிவந்தார்கள். ஆனால், (கல்விக்) கடலான இப்னு அப்பாஸ்(ரலி) அதை மறுத்து, '(நபியே! இவர்களிடம்) கூறுங்கள்: எனக்கு அருளப்பெற்ற வேத அறிவிப்பில் (வஹீயில்), உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; செத்த பிராணியையும் சிந்தப்பட்ட இரத்தத்தையும் பன்றி இறைச்சியையும் தவிர. நிச்சயம் இவை அசுத்தமாகும்' எனும் (திருக்குர்ஆன் 06:145 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

மேற் கண்ட ஹதிஸில் ஜாபர் பின் ஸைத்(ரஹ்) அவர்கள் தான் இடம் பெற்றிருக்கிறார்கள் தவிர, ஜாபர் பின் அப்துல்லா(ரலி) அல்ல  என்பதை பார்க்கவும்

சகப்பாக்களை குறை கூறவதற்கு என்ன ஒரு சந்தோசம் அபண்டமாக ஜாபர் பின் அப்துல்லா(ரலி) அவர்கள் மீது பழி சுமத்தின விமர்ச்சிபவர்களை வன்மையாக கண்டிகின்றேன், எத்தனை பேர் உன் பேச்சை கேட்டு ஜாபர் பின் அப்துல்லாவை தவறாக நினைத்து இருப்பார்கள், நீ தற்போது ஒரு வேளை மன்னிப்பு கேட்கின்றாய் வைத்து கொள்வோம், ஆனால் பேச்சை கேட்டு இறந்து போனவர்களின் கதி என்ன?

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் ஜாபர் பின் அப்துல்லா(ரலி) அவர்களும் நாட்டு கழுதையின் இறைச்சியை உண்ணுமாறு கூறினார்களா?

இது தவறு.

நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

(எம் தந்தை)அலீ(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அலீ(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள் .(இமாம் புகாரி(ரஹ்))இமாம் முஸ்லிம்(ரஹ்)

இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் பதித்துள்ள ஹதிஸ் அலி(ரலி) அவர்கள் சந்திக்கும் முன் நடந்த நிகழ்ச்சியாக இருக்கும்,

ஜாபர் பின் அப்துல்லா(ரலி) அவர்களும் நாட்டு கழுதை உண்ண கூடாது என தடைவிதிதார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்; குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)கூறினார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

தொழுகையிலும் மாற்றங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்றையும் என்னால் காண முடியவில்லை என்று அன (ரலி) கூறினார்கள். “ஏன் தொழுகை இருக்கிறதே என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கவர்கள் “தொழுகையிலும் பாழ்படுத்த வேண்டிய அளவுக்குப் பாழ்படுத்திவிட்டீர்களே என்று திருப்பிக் கேட்டார்கள்.
நூல் : புகாரி 529, 530

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நடைமுறை அனைத்தும் அனைவரிடமும் அப்படியே நீடிக்க வில்லை எனும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரம் எனக் கூறுவது தவறல்லவா?

நமது பதில்:

சரியான மொழி பெயர்ப்பு:

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற்றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை' என்று அனஸ்(ரலி) குறிப்பிட்டார்கள். 'தொழுகை இருக்கிறதே' என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. 'அதில் கூட செய்வதையெல்லாம் நீங்கள் (கூடக் குறைய) செய்து விடவில்லையோ? எனத் திருப்பிக் கேட்டார்கள் என கைலான் அறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்)

அனஸ் இப்னு மாலிக்(ரலி) 'டமாஸ்கஸ்' நகரிலிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது' என அனஸ்(ரலி) கூறினார்கள் என ஸுஹ்ரீ அறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்).

சகோதரரே இங்கு அனஸ்(ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரத்தைப் பற்றி தான் கூறினார்களே தவிர, சவூதி அரேபியவை நோக்கி குறிப்பிடவில்லை, டமாஸ்கஸ் நகரத்தை பற்றி ஹதிஸில் குறிப்பிட்டதை அப்படியே மறைத்துவிட்டார்கள் ஏனென்றால் சகபாக்கள்(ரலி) குறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்களிடம் எப்படி இருக்கும். அனஸ்(ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரத்தில் இருக்கும் போது தான் இவ்வாறு கூறினார்கள்.

அனஸ்(ரலி) அவர்கள் யாரை நோக்கி குறிப்பிட்டு சொன்னார்கள் என்பதை சரியான முறையில் ஹதிஸில் குறிப்பிடவில்லை,

ஆதலால்

சந்தேகமான விசயத்தை நாம் பின் தொடர வேண்டாம்:

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்(அல்குர்ஆன் 17:36)

உன்னைச் சந்தேகத்தில் ஆழ்த்தக் கூடியதை விட்டு விட்டு சந்தேகமில்லாததைச் செய்திரு. ஏனெனில் உண்மையே உள்ளத்தின் அமைதியாகும் பொய்தான் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் திர்மதி(ரஹ்)

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பார்கள் என்று திருக்குர்ஆனிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தனது மரணம் பற்றி முன் அறிவிப்பு செய்திருந்தார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்க மாட்டார்கள்; உயித்தெழுவார்கள் என்றும் இஸ்லாத் தின் அடிப்படைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.
அபூ பக்ர் (ரலி) அவர்கள் தக்க ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையைப் புரிய வைக்கும் வரை நபித் தோழர்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நூல் : புகாரி 1242, 3670

நமது பதில்:

நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.(இமாம் புஹாரி(ரஹ்)

ஆனால் உமர்(ரலி) அவர்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டு மென்றால் விவரங்களை கீழே படிக்கவும், மேலும் உமர்(ரலி) அவர்கள் கொள்கை குழப்பாம் செய்தார் என பழி சுமத்தியவர்கள் தெரிந்த கொள்ள வேண்டும்,

நபி(ஸல்) அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள்:

ஜும்ஆவின் தினத்தில் என்மீது அதிகமாக ஸலவாத் ஓதுங்கள் அது எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கப்ரில் மடிந்தவர்களாயிருக்கும் போது எங்களின் ஸலவாத்தை உங்களுக்கு எவ்வாறு எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி தின்பதை விட்டும் தடை செய்துள்ளான் என்றார்கள் என ஷத்தாத்பின் அவ்ஸ்(ரலி)அறிவிக்கிறார்கள்(இமாம் அபூதாவூத்(ரஹ்), இமாம் இப்னுமஜா(ரஹ்), இமாம் நஸயீ(ரஹ்), இமாம் தாரமீ(ரஹ்), இமாம் அஹ்மத்(ரஹ்), இமாம் இப்னுஹிப்பான்(ரஹ்)).

நிச்சயமாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலவாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என இப்னு ம்ஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்கள்(இமாம் நஸயீ(ரஹ்), இமாம் தாரமீ(ரஹ்))

உங்களில் ஒருவர் எனக்கு ஸலாம் கூறினால்,அல்லாஹ் எனது உயிரை என்னில் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கிறான். அதன் பயனாக அவருக்கு பதில் ஸலாம் அளிக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என அபூஹுரைரா(ரலி)அறிவிக்கிறார்கள் (இமாம் அபூதாவூத்(ரஹ்), இமாம் பைஹகீ(ரஹ்), இமாம் அஹ்மத்(ரஹ்))

'எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்! உங்களது வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்! நீங்கள் எங்கிருந்த போதிலும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஸலவாத்து எனக்கு எத்தி வைக்கப்படுகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி)அறிவிக்கிறார்கள் (இமாம் அபூதாவூத்(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்)

மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் சத்திய வார்த்தையை சாதரணமாக படித்த நமக்கே தெரியும் நபி(ஸல்) உயிரோடு தான் இருக்கிறார்கள், அதாவது உமர்(ரலி) அவர்கள், நபி(ஸல்) மரணிக்கவில்லை என்று கூறினதை இந்த அர்தத்தில் தான் அவர்கள் இருந்திருப்பார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் உரை நிகழ்த்தியடன் அவர்கள் அமைதி காத்தார்களே தவிர அல்லாவின் வசனத்தைலிருந்து தன்னை தெளிவு படுத்தி கொண்டார்கள்.

இதிலிருந்து நாம் நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் வெளிப்படையான் இந்த உலகத்தில் தான், ஆனால் அவர்கள் மற்ற நபிமார்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

அதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளது,

நபிமார்களும் உயிரோடு தான் இருக்கிறார்கள், அவர்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள்,பள்ளியிலும்தொழுகிறார்கள்:

நடுநிலையுடன் படிப்பவருக்கு, இன்சா அல்லா விரைவில்

நபி(ஸல்அவர்களின் தோழர்கள் (சகபாக்கள்(ரலி)) அவர்களும் நமக்கு முன்மாதிரி:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நட்சத்திரங்கள் வானத்திற்கு பாதுகாவலாகும், நட்சத்திரங்கள் சென்றால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும், நான் எனது தோழர்களுக்கு பாதுகாவலன் ஆவேன், நான் சென்றுவிட்டால்  எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும், எனது தோழர்கள் எனது உம்மத்தினருக்கு பாதுகாவலர்கள் ஆவார்கள், எனது தோழர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்கு வாக்களிப்பட்டது வந்துவிடும்,(ஸஹிஹ் இமாம் முஸ்லிம்(ரஹ்)

விளக்கம்:

(இரவில்)நட்சத்திரங்கள் வானத்திற்கு எவ்வாறு பாதுக்காப்பாக உள்ளதோ! அவ்வாறு நபித்தோழர்கள் இந்த பூமியுள்ளோருக்கு நேர்வழிக்காட்டக்கூடியவர்களாக உள்ளார்கள், இந் நட்சத்திரங்கள் சென்றுவிட்டால் இருள் ஏற்படும், அது போல் நபித்தோழர்களை நீங்கள் புறக்கணித்தால் காரிருள் உங்கள் சூழ்ந்து கொள்ளும், பிறகு மார்க்கத்தை விட்டு வெளியேறக்கூடியவரளாக நீங்கள் மாறி விடுவீர்கள்,

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.(திருக்குர்ஆன்3:172)

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.(திருக்குர்ஆன் 3:173)

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.(திருக்குர்ஆன் 3:174)

இன்னும்(இஸ்லாத்தை ஏற்பதில்முஹாஜிர்களிலும்அன்ஸார்களிலும்முதலாவதாக (ஈமான் கொள்வதில்முந்திக்கொண்டவர்களும்அவர்களை(எல்லாநற்கருமங்களிலும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ் பொருந்திகொண்டான்அவ்வாறே அவர்களும் அல்லாவை பொருந்தி கொண்டார்கள்அன்றியும் அவர்களுக்காகசுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான்அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.(9:100),

அவர்களை பின்பற்றினால் சுவர்க்கம் தான் அல்குர்ஆனில்(9:100) அல்லா தெளிவாக குறிப்பிட்டுவிட்டான்இதன் ஒரு அத்தாட்சி ஒன்று போததா? ‎

(நபியே!) நீர் சொல்வீராக! "இதுவே என்னுடைய (நேரியவழியாகும்நான் அல்லாஹ்வின் பால் (உங்களைஅழைக்கின்றேன்நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்அல்லாஹ் மிகத் தூய்மையானவன்ஆகவேஅவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்." (12:108)

 நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம் என்ற வாசகத்தில் தெளிவான ஞானம் என்பதற்கு அரபியில் இடம்பெற்ற வார்த்தை "பஸீரத்என்பதாகும்பின்பற்றியவர்கள் என்பதில் மறுமை நாள் வரை நபி (ஸல்அவர்களைப் பின்பற்றுபவர்களும் அடங்குவர் என்றிருந்தாலும் இதில் முதல் பட்டியலில் இடம்பெறுபவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள் என்பதில் ஐயம் இல்லை.
ஆகவேநீங்கள்(நபி(ஸல்),ஸகபாக்கள்(ரலி)) ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர்எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்அவன் (யாவற்றையும்செவியுறுவோனாகவும், (எல்லாம்அறிந்தோனுமாகவும் இருக்கிறான்(அல் குர் ஆன் 2:137.

 மேலும் எனினும், (அல்லாஹ்வின்தூதரும்அவருடன் இருக்கும் முஃமின்களும்தங்கள் செல்வங்களையும்தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்(அல் குர்ஆன் (9:88)),

சகபாக்களின் சிறப்புகளையும் மற்றும் சகபாக்களைப் நிரகரிப்பவர்களைப் பற்றியும் அல்லா திருகுர்ஆனில் கூறுகிறான்:

முஹம்மது(ஸல்அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்அவருடன் இருப்பவர்கள்காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள்தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்ருகூஃ செய்பவர்களாகவும்ஸுஜூது செய்பவர்களாகவும்அல்லாஹ்விடமிருந்து (அவன்அருளையும் (அவனுடையதிருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்அவர்களுடைய அடையாளமாவதுஅவர்களுடைய முகங்களில் (நெற்றியில்ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவதுஒரு பயிரைப் போன்றதுஅது தன் முளையைக் கிளப்பி( பின்அதை பலப்படுத்துகிறதுபின்னர் அது பருத்துக் கனமாகிபிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில்அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறதுஇவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்லஅமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும்மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்(அல்குர்ஆன் 48:29)

சகபாக்களைஅல்லா எவ்வாறு அவர்களையும் அவர்களின் அறிவையும் அவர்களையும் , அல்லா எவ்வாறு உருவாக்கியுள்ளான்ஒரு பயிரை உதரணமாக கூறி அல்லா அவர்களை இறுதியில் விவசாயிகளை மகிழ்வடைய செய்யும் விதத்தில்  முடிக்கின்றான்அந்த விவசாயிகள் யாருமில்லை சகோதரர்களே நாம் தான்அவர்களைப் பின்பற்றுவதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளான்.

(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரியவழியாகும்நான் அல்லாஹ்வின் பால் (உங்களைஅழைக்கின்றேன்நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்அல்லாஹ் மிகத் தூய்மையானவன்ஆகவேஅவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.(அல்குர்ஆன் 12:108)

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்றதம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்வேறு சிலர் (ஆர்வத்துடன் அதைஎதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.(அல்குர்ஆன் 33:23)

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்கொண்டான்அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்துஅவர்கள் மீது (சாந்தியையும்அமைதியை(யும்இறக்கியருளிஅவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.(அல்குர்ஆன் 48:18)

மார்க்க விஷயத்தில் இறைவனின் வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறியது மார்க்க ஆதாரமாகாது என்று கூறி நபி(ஸல்அவர்களை நோவினை செய்பவர்களைப் பற்றி  அல்லா தனது திருகுர்ஆனில் குறிப்பிடுகின்றான்:

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோஅவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்மேலும்அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.(அல்குர்ஆன் 33:57)

சகப்பாக்களை வஹிக்கு மாற்றமாக நடந்தார்கள் எனக் கூறி சகப்பாக்களை நோவினை செய்தவர்களைப் பற்றி      அல்லா தனது திருகுர்ஆனில் குறிப்பிடுகின்றான்:

ஈமான் கொண்ட ஆண்களையும்ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்கூறி எவர் நோவினை செய்கிறார்களோஅவர்கள் நிச்சயமாக அவதூறையும்வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்(அல்குர்ஆன் 33:58)

சிறந்த சமுதாயம்:
என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரேபிறகு, (சிறந்தவர்கள்அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர்அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர்கள் என நபி(ஸல்அவர்கள் கூறினார்கள் என என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலிஅறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்இமாம்முஸ்லிம்(ரஹ்))
மக்களில் சிறந்தவர்கள் - ஸஹபாக்கள்(ரலி),
அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்அவர்களையடுத்து வருபவர்கள் - தாபின்கள்(ரலி)
அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்அவர்களையடுத்து வருபவர்கள்என்று இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள் - தபதாபின்கள்(ரலி),

சகபாக்களை ஏசினவிற்கு அல்லாவின் சாபமும்மலக்குமார்களின்  சாபம் கிடைத்து கொண்டே இருக்கிறது:

என் தோழர்களைத் ஏசாதீர்கள்ஏனெனில்உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களானஅவர்கள் (இறை வழியில்செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்அந்த தர்மம் எட்ட முடியாது என நபி(ஸல்அவர்கள் கூறியதாக என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலிஅறிவித்தார். ((இமாம் புஹாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்))

என் தோழர்களை யாரெல்லாம் ஏசிகிறார்களோஅவர்கள் மீது அல்லாவும்மலக்குமார்களும் சபிக்கிறார்கள்(இமாம் தப்ரானி(ரஹ்)

எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன் என நபி(ஸல்அவர்கள் கூறியதாக என அபூ ஹுரைரா(ரலிஅறிவித்தார்கள்(இமாம் புஹாரி(ரஹ்))


ஒருவர் சகப்பாக்களை இப்படி ஏசியுள்ளாரே? அப்போ அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை சிந்தியுங்கள், அல்லாவின் சாபம், மலக்குமார்களின் சாபம் கொண்ட ஒரு மனிதரை நீங்கள் கண்டிமூடித்தனமாக பின்பற்றுகிறீர்களே என்பதை உங்களை நீங்களே அறியாமல் உள்ளீர்கள்


கீழுலுள்ள லிங்க் கிளிக் செய்யவும்




நயவஞ்சகனை அடையாளம் காணுங்கள்:

நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதைவிட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)கள் அறிவித்தார்.  இமாம் புகாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்) )இமாம் முஸ்லிம்(ரஹ்) ஒர் அறிவிப்பில்: அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சொர்க்கத்திற்கு செல்லும் கூட்டம் சகபாக்களைப் பின்பற்றிய கூட்டம்:

நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்:ஒரு காலம் வரும் நன்கு பசிதிருப்பவன் உணவை கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் சமுதாயத்தை நோக்கி மற்றவர்கள் பாயவார்கள்.
அதற்கு பிறகு நபி தோழர் வினவினார்கள்அல்லாவின் தூதரே அப்பொழுது முஸ்லிம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?
அதற்கு நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரை போல் ஆகிவிடுவார்கள்.அவர்கள் உள்ளத்தில் வஹ்ன் வந்து விடும்.
அதற்கு பிறகு நபி தோழர் வினவினார்கள்அல்லாவின் தூதரே வஹ்ன் என்றால் என்ன்?
அதற்கு நபி(ஸல்அவர்கள் பதில் கூறினார்கள்இவ்வுலகத்தின் மீது அதிக பற்றும் மரணத்தை அஞ்சுவது ஆகும்
நபி(ஸல்அவர்கள் அறிவித்தார்கள்என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டமாக பிரிவர்அதில் ஒரே ஒரு கூட்டத்தை தவிர மற்ற அனைவரும் நரகத்திற்கு செல்வர் இதை செவியுற்ற நபி தோழர் அல்லாவின் தூதரேஅந்த சுவனத்திற்கு செல்லும் அந்த கூட்டம் எது?
அதற்கு நபி(ஸல்அவர்கள் பதில் கூறினார்கள்அந்த கூட்டம் நானும் என்னுடைய தோழர்களையும் பின்பற்றிய கூட்டம் ஆகும். (இமாம் திர்மதி(ரஹ்இமாம் அபூதாவுத்(ரஹ்))

சகபாக்களை பின்பற்ற வேண்டும் நபி(ஸல்கூறியுள்ளார்கள்:

(நீங்கள்)என்னை பின்பற்றுங்கள் மேலும் எனக்கு பிறகு வருபவர்கள் உங்களைப் பின்பற்ற வேண்டும் என நபித்தோழரைப் பார்த்து நபி(ஸல்கூறினார்கள் என அபூஸயித்(ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதிஸின் பொருள் நபி(ஸல்அவர்களிடமிருந்து இஸ்லாத்தின் விதிகளை நபித்தோழர்கள்(ரலிகற்க வேண்டுமென்றும்நபித்தோழருக்கு(ரலிபின் வருபவர்கள்(தாபியின்கள்நபித்தோழர்களைப்(ரலிபின்பற்றபட வேண்டுமென்றும்இவ்வாராக உலகம் அழிவும்வரைப் பின்பற்ற பட வேண்டும் என்று கூறப்படுகிறது(இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்)

வெற்றிப்பட வேண்டிய கூட்டத்தில் இருக்க வேண்டுமென்றால்அல்லாவையும் அல்லாவின் தூதர் நபி(ஸல்அவர்களையும் அவர்கள் பின்பற்றி நடந்த சகபாக்களையும் பின்பற்றுவது நம் மீது கடமையாகும்,  

அல்லா அனைத்தும் அறிந்தவன்.